ராமர் பிறந்த இடத்தை  அகழ்வாராய்ச்சி செய்து  கண்டுபிடிக்க நேபாளம் முடிவு..
நேபாள பிரதமர் சர்மா ஒளி, அண்மைக்காலமாகச் சர்ச்சை கருத்துக்களைத் தெரிவித்து, உள் நாட்டிலும் , வெளிநாட்டிலும் வறுத்து எடுக்கப்படுகிறார்.
சில தினங்களுக்கு முன்பு காட்மண்டுவில் உள்ள தனது இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஒளி,’’ ராமர் இந்தியாவில் பிறக்கவில்லை. நேபாள நாட்டின் பிர்குஞ்ச் அருகேயுள்ள தோரி என்ற இடத்தில் தான் ராமர் அவதரித்தார்’’ என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
’’பொறுப்பற்ற முறையில் ஒளி கருத்துச் சொல்கிறார்’’ என அங்குள்ள பல கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
இந்த நிலையில் பிரதமர் ஒளி குறிப்பிட்ட தோரி என்ற இடத்தில் அகழ்வாராய்ச்சி நடத்த நேபாள தொல்லியல் துறை திட்டமிட்டுள்ளது.
‘’எங்கள் பிரதமரே ராமர் பிறந்த இடம் தோரி எனத் தெரிவித்துள்ளதால், இது குறித்து ஆய்வு நடத்தும் பொறுப்பு எங்களுக்கு உள்ளதாகக் கருதுகிறோம்’’ என்று நேபாள தொல்லியல் துறை இயக்குநர் தாமோதர் கவுதம் கூறி உள்ளார்.
‘இது தொடர்பாக நிபுணர்கள் குழுவுடன் விரைவில் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும்’’ என்றும் அவர் தெரிவித்தார்.
-பா.பாரதி.