Random image

சீனாவுடன் ராணுவப் பயிற்சியில் நேபாளம் : இந்தியாவுக்கு பதிலடியா?

காட்மண்டு

பிம்ஸ்டெக் அமைப்பின் சார்பில் நடந்த ராணுவ பயிற்சியில் கலந்துக் கொள்ளாத நேபாளம் தற்போது சீனாவின் ராணுவப் பயிற்சியில் கலந்துக் கொள்ள உள்ளது.

வங்கதேசம், இந்தியா, மியான்மர், இலங்கை, தாய்லாந்து, பூடான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளை உள்ளடக்கியது பிம்ஸ்டெக் அமைப்பாகும்.   இது வங்கக் கடல் சுற்றுப்புற் நாடுகளின் கூட்டமைப்பாகும்.    இந்த அமைப்பானது இந்த நாடுகளுக்கிடையே சமத்துவம்,  பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது.

இந்தியா மற்றும் நேபாள நாடுகளுக்கிடையே உள்ள உறவில் தற்போது விரிசல் ஏற்பட்டுள்ளது.   கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவின் வேண்டுகோளையும் மீறி நேபாளம் சீன அரசு நடத்திய ராணுவப் பயிற்சியில் கலந்துக் கொண்டது.   இந்தியா பிம்ஸ்டெக் நாடுகளுக்கிடையே ராணுவப் பயிற்சி நடத்தியது.

இந்த பயிற்சியை நேபாளம் விரும்பாததால் இதில் கலந்துக் கொள்ளவில்லை.   சீனா மாத இறுதியில் ராணுவப் பயிற்சி நடத்த உள்ளது.   இந்தியாவின் பயிற்சிக்கு பதிலடி கொடுப்பது போல் நேபாளம் இந்தப் பயிற்சியில் கல்ந்துக் கொள்ளப் போவதாக அறிவித்துள்ளது.

ஏற்கனவே நேபாளத்துக்கு தங்கள் நாட்டு துறைமுகங்களை உபயோகித்துக் கொள்ள சீனா அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.