வரும் 21ம் தேதி முதல் நேபாளத்தில் உள்நாட்டு விமானங்கள் இயக்கப்படும்: அமைச்சர் யோகேஷ் பட்டாராய்

காத்மாண்டு: வரும் 21ம் தேதி முதல் நேபாளத்தில் உள்நாட்டு விமானங்கள் இயக்கப்படும் என்று அம்மாநில விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் யோகேஷ் பட்டாராய் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஆனாலும் அரசு சில தளர்வுகளை அறிவித்து வருகிறது. குறிப்பாக  போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வரும் 21ம் தேதி முதல் நேபாளத்தில் உள்நாட்டு விமானங்கள், மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்தை தொடங்க உள்ளதாக அந்நாட்டு சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் யோகேஷ் பட்டாராய் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறி இருப்பதாவது: செப்டம்பர் 21ம் தேதி முதல் விமான சேவை தொடங்கும். கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், மக்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளில் ஒன்றாக விமானம் இயக்கப்படுகிறது என்று கூறி உள்ளார்.