காத்மாண்டு:

லகின் 2வது உயரமான மலையை ஏறி நேபாள குழுவினர் சாதனை படைத்துள்ளனர்.

இந்த சாதனையை நேப்பாளத்தைச் சேர்ந்த 10 பேர் அடங்கிய குழு படைத்துள்ளனர். இந்த குழுவினர், பனிக்காலத்தின் போது  உலகின் ஆக உயரமான இரண்டாவது மலையான K2-வை,  வெற்றிகரமாக ஏறி சாதனை படைத்துள்ளனர்.

பாகிஸ்தானிய எல்லையில் அமைந்துள்ள 8,600 மீட்டர் உயரம் கொண்ட K2-மலை, இமயமலைத் தொடரில் மிகப் பிரபலமானது. இந்த மலையில் மணிக்கு சுமார் 200 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதும், இங்கு வெப்பநிலை, உறைநிலைக்குக்-கீழ் 60 டிகிரி செல்சியஸுக்கும் குறைவாகப் பதிவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மலையை, பத்து பேர் கொண்ட நேபாள குழுவினர் மலையேற்றத்தை முடித்துவிட்டு, மலையடிவாரத்தில் உள்ள முகாமுக்குக் குழுவினர் திருப்பியுள்ளனர்.