ஆகஸ்ட் 8 ஆம் தேதி அஜித்தின் ‘நோ்கொண்ட பாா்வை’ வெளியாகும் என அறிவிப்பு…!

--

 

போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிக்கும் நோ்கொண்ட பாா்வை படம் வருகின்ற ஆகஸ்ட் 8 ஆம் தேதி வெளியாகும் என அப்படத்தின் தயாரிப்பாளரும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார் .

இந்தப் படத்தில் அஜித்துடன் பாலிவுட் நடிகை வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன் உட்பட பலர் நடித்து வருகின்றனர். படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

பாலிவுட்டில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான ‘பிங்க்’ படத்தின் ரீமேக் தான் அஜித் நடிப்பில் நோ்கொண்ட பாா்வை என்ற தலைப்பில் உருவாகி உள்ளது.