விமான விபத்தில் நேதாஜி உயிரிழக்கவில்லை:பிரான்ஸ் ஆய்வாளர் தகவல்

டில்லி:

1945 ஆம் ஆண்டு சுபாஷ் சந்திரபோஸ் விமான விபத்தில் உயிரிழக்கவில்லை என்று பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் . தைவான் நாட்டில் கடந்த 1945 ஆம் ஆண்டு நிகழ்ந்த விமான விபத்தில் நேதாஜி உயிரிழந்ததாக மத்திய அமைச்சகம் ஆவணங்கள் வெளியிட்டது. ஆனால் இது குறித்து சர்ச்சை இன்றுவரை தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில், நேதாஜி மரணம் தொடர்பான ரகசிய ஆவணம் ஒன்றை பிரான்ஸ் நாட்டு வரலாற்று ஆய்வாளர் ஜே.பி.பி.மோரே வெளியிட்டுள்ளார். அந்த ஆவணத்தில் தைவான் விமான விபத்தில் நேதாஜி இறக்கவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. விமான விபத்தில் உயிரிழந்தது நேதாஜிதான் என்பதற்கு எந்த சான்றும் இல்லை என்றும் மோரே, தனது ஆவணத்தில் தெரிவித்துள்ளார்.