தேர்தலில் வெற்றிபெற புதிய ஆயுதத்தை கையில் எடுத்த பென்ஜமின் நேதன்யகு

--

ஜெருசலேம்: இஸ்ரேலில் நடக்கவுள்ள பிரதமர் தேர்தலில், ஒரு எதிர்பாராத வாக்குறுதியைக் கொடுத்து, பலரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பியுள்ளார் தற்போதைய பிரதமர் பென்ஜமின் நேதன்யகு.

மேற்காசியாவில் உள்ள இஸ்ரேல் நாட்டில், பிரதமர் பதவிக்கான தேர்தல் நடக்கவுள்ளது. இதில் மீண்டும் போட்டியிடுகிறார் தற்போதைய பிரதமர் பென்ஜமின் நேதன்யகு.

இத்தேர்தலில் வெற்றி பெறுவது கடினம் என்ற சூழலில்தான், தான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால், பாலஸ்தீனர்களின் மேற்கு கரைப் பகுதியின் மீது, இஸ்ரேலின் நிரந்தர ஆதிக்கம் மேற்கொள்ளப்படும் என்றுள்ளார்.

எனவே, இஸ்ரேலியர்கள் அந்த ஆதிக்கத்தை விரும்பினால், தனக்கு வாக்களிக்கலாம் என்று கொக்கி போட்டுள்ளார். இது, தேர்தல் களத்தில் எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இஸ்ரேலின் ஆக்ரமிப்பு முயற்சிகளுக்கு, அமெரிக்காவின் டொனால்ட் ட்ரம்ப் அரசு அளித்துவரும் தொடர்ச்சியான ஆதரவு குறித்தும் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. தான் வெற்றிபெற்றால், அமெரிக்க ஆதரவுடன் இதை நிறைவேற்றுவது சாத்தியம் என்பது நேதன்யகுவின் வாதம்.

– மதுரை மாயாண்டி