கொரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகள் திறக்கமுடியாத நிலை தற்போது நிலவுவதால் திரைப்படங்களில் மட்டுமே படம் வெளியான காலம் மாறி டிஜிட்டல் தளங்களிலும் திரைப்படங்கள் வெளிவரத் தொடங்கிவிட்டன.

அமேசான், நெட்ஃபிளிக்ஸ் உள்ளிட்ட ஸ்ட்ரீமிங் வலைதளங்களில் வெப்சீரிஸ் மட்டுமே அதிகமாக ரிலீஸ் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது படங்கள் தணிக்கை செய்யாமல் வெளியாகி வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் வன்முறையும், ஆபாசமும் அதிகமாக இருப்பதால் ஓ.டி.டி. ஆன்லைன் ஸ்ட்ரீமிங் வலைதளங்களின் வீடியோக்களுக்கு தணிக்கையை அமல்படுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் கடிதம் எழுதியுள்ளார்.

மேலும் ஓடிடி தளங்களில் இடம்பெறும் அநாகரிகமான வசனங்களும், ஆட்சேபனைக்குரிய காட்சிகளும் அதைப் பார்ப்பவர்களின் மனதில் பாதிப்பை உண்டாக்குவதாகவும் கடிதத்தில் நிதிஷ் குமார் குறிப்பிட்டுள்ளார்.