நெட்ஃப்ளிக்ஸ் தயாரிக்கும் மெகா பட்ஜெட் படம்….!

2009ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த மார்க் க்ரேனி எழுதிய ‘தி க்ரே மேன்’ நாவல் திரைப்படமாக உருவாகப்போகிறது .

இந்த மெகா பட்ஜெட் படத்தை தயாரிக்க நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இப்படத்தை அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம்’ படத்தை இயக்கிய ருஸ்ஸோ சகோதரர்கள் இயக்க போகிறார்கள் .

கேப்டன் அமெரிக்காவாக நடித்து புகழ்பெற்ற க்றிஸ் எவான்ஸ், ரயான் கோஸ்லிங் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.

இப்படத்தின் பட்ஜெட் இந்திய மதிப்பில் ஏறக்குறைய ரூ.1300 கோடி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.