வெளிநாட்டு பெண் பத்திரிகையாளர் மர்ம மரணம் : சென்னையில் பரபரப்பு

சென்னை

சென்னை தி நகரில் ஓட்டல் அறையில்ல் நெதர்லாந்து பெண் பத்திரிகையாளர் பிணமாக கிடந்துள்ளார்.

சென்னையில் உள திநகர் வெங்கடேசன் தெருவில் ஒரு தங்கும் ஓட்டல் உள்ளது.   இதில் ஒரு வெளிநாட்டுப் பெண் கடந்த 27 ஆம் தேதி மதியம் 12.30 மணிக்கு ஒரு அறை எடுத்து தங்கி உள்ளார்.    தாம் நெதர்லாந்தை சேர்ந்தவர் எனவும் ஒரு பத்திரிகையாளர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.  அவர் நேற்று வரை தங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

முந்தா நாள் இரவு அவர் அறைக்குள் சென்றவர் கதவை மூடிக் கொண்டுள்ளார்.   நேற்று மதியத்துடன் அவர் தங்கும் நேரம் முடிவதால் அவரை ஓட்டல் பணியாளர் சுரேஷ் என்பவர் கதவைத் தட்டி அழைத்துள்ளார்.   அந்தப் பெண் கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்த சுரேஷ் மாற்றுச்சாவியால் திறந்து உள்ளே சென்றுள்ளார்.

அந்த அறைக் கட்டிலில் அந்தப் பெண் பிணமாக கிடந்துள்ளார்.    அதிர்ச்சி அடைந்த சுரேஷ் மேலாளரிடம் கூற அவர் காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார்.   அவர்கள் விரைந்து வந்து சோதித்த போது அந்தப் பெண் இறந்து வெகு நேரம் ஆனதும்,  வாயில் நுரை இருந்ததால் விஷம் அருந்தி இறந்திருக்கலாம் எனவும் காவலர்கள் தெரிவித்துள்ளனர்

அந்தப் பெண்ணின் உடல்  பிரேத பரிசோதனைக்காக சென்னை ராயப்பேட்ட மருத்துவ மனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.    அந்த சடலத்தின் ஒரு நீல நிற் பாட்டில் இருந்துள்ளது.   அதையும் ரசாயன பரிசோதனைக்கு காவலர்கள் அனுப்பி உள்ளனர்.

நெதர்லாந்தை சேர்ந்த அந்தப் பெண்ணின் பெயர்.லிண்டா இரேனா என்பதும் அவர் வயது 24 என்பதும் தற்போது தெரிய வந்துள்ளது.   அவர் மர்ம மரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.