நெதர்லாந்து:
நெதர்லாந்தில் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

ஐரோப்பிய நாடான நெதர்லாந்தில் அதிகரித்துவரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. மருத்துவ தேவைகளுக்கு மட்டுமே பொதுமக்கள் வெளியே வர அனுமதிக்கப்பட்டுள்ளனர். கட்டுப்பாடுகளை மீறி வெளியே வருபவர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஊரடங்கு நீடிப்பு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் கூடிய மக்கள், ஊரடங்கை வாபஸ் பெற வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், கல்வீச்சு மற்றும் தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்டதால், கூட்டத்தை கலைக்க தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.