நெதர்லாந்து :  கட்டாய உடல் உறுப்பு தான சட்டம் இயற்றம்

ஹேக், நெதர்லாந்து

நெதர்லாந்து நாட்டில்  அனைவரும் கட்டாயம் உடல் உறுப்பு தானம் செய்ய வேண்டும் என சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

உடல் உறுப்பு தானம் என்பது மரணத்துக்கு பின் இருதயம், கண்கள், சிறுநீரகம், நுரையீரல் போன்ற பொருட்களை மற்றவர்களுக்கு மாற்ற சம்மதம் தெரிவிப்பது ஆகும்.    தற்போது விபத்து போன்ற காரணங்களால் மூளைச்சாவு நேரிடும் போது அவ்வாறு தானம் அளிக்க உறவினர்கள் ஒப்புக் கொள்வது உடல் உறுப்பு தானம் ஆகும்.

ஐரோப்பாவில் ஸ்பெயின், பெல்ஜியம் போன்ற ஒரு சில நாடுகளில் மக்கள் அனைவரும் தங்கள் மரணத்துக்கு பின் உடல் உறுப்புக்கள் தானம் செய்ய வேண்டும் என சட்டம் உள்ளது.    தற்போது அதே போல ஒரு சட்டம் நெதர்லாந்து நாட்டிலும் இயற்றப்பட்டுள்ளது.   இந்த சட்டம் அந்நாட்டின் பாராளுமன்ற இரு அவைகளின் ஒப்புதலுக்கு பின் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தின் படி 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரிடமும் உடல் உறுப்பு தானம் செய்ய சம்மதக் கடிதம் கோரப்படும்.   ஒரு சில உடல்நிலைக் காரணங்கள் தவிர மற்றவர்கள் இதற்கு சம்மதம் தெரிவித்து கடிதம் அளிக்க வேண்டும்.   சம்மதம் தெரிவித்த பின்பு,  உடல் நிலை காரணமாக தானம் அளிக்க முடியாதோருக்கு அரசு விலக்கு அளிக்கும்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Netherlands passes law for organ donation
-=-