நெதர்லாந்து : தரையில் சிந்திய காப்பியை சுத்தம் செய்த பிரதமர்

ம்ஸ்ட்ர்டாம்

நெதர்லாந்து பிரதமர் பாராளுமன்றத் தரையில் தான் சிந்திய காப்பியை தானே துடைத்து சுத்தம் செய்துள்ளார்.

ஐரோப்பாவின் மிகப்பெரிய நாடுகளில் டச்சு நாடான நெதர்லாந்தும் ஒன்றாகும்.   இந்நாட்டின் பிரதமர் எடுத்துச் சென்ற காப்பி தரையில் சிந்தியதால் தானே தரையை துடைத்து சுத்தம் செய்துள்ளார்.   இந்த விடியோ காட்சி சமுக வலைத்தளங்களில் வெளியாகி வைரல் ஆகி உள்ளது.

அந்த விடியோவில் பாராளுமன்றத்தில் நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூடே காப்பியை எடுத்துச் செல்கிறார்.   அந்தக் காப்பியை தற்செயலாக கீழே கொட்டி விடுகிறார்.    அருகில் இருந்த பணியாளர்களிடம் இருந்து துடைப்பானை (MOB) வாங்கி அவரே சுத்தம் செய்கிறார்.   அதை கண்ட பணியாளர்கள் கைதட்டி பாராட்டுகின்றனர்.

துடைப்பானை சரியாக கையாள முடியாத நிலையில் இருந்த பிரதமரிடம் இருந்த துடைப்பானை வாங்கிய பணியாளர்கள் சரிசெய்து தருகின்றனர்.  பிரதமர் சிரித்துக் கொண்டே துடைப்பதை தொடர்கிறார்.   இவ்வாறு அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது.   அத்துடன் நெதர்லாந்து பிரதமருக்கு உலகில் உள்ள பல நாடுகளின் மக்கள் புகழாரம் சூட்டி வருகின்றனர்.