பாஜகவும் வெளிநாட்டு உதவிகளும்  நெட்டிசனின் பட்டியல்

டில்லி

குஜராத் பூகம்ப சமயத்தில் வெளி நாட்டு உதவிகளை ஏற்றுக் கொண்ட பாஜக தற்போது கேரள வெள்ளத்துக்கு அமீரக உதவியை மறுத்துள்ளது என நெட்டிசன் ஒருவர் பதிந்துள்ளார்.

குஜராத் பூகம்பம்

கேரளாவில் பெய்த கடும் மழையால் வெள்ளம் ஏற்பட்டு மாநிலம் முழுவதும் துயருற்றுள்ளது.   மத்திய அரசு,  பல மாநில அரசுகள்,  தனியார் தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் என பலரும் உதவிகளை அளித்து வருகின்றனர்.   ஐக்கிய அரபு அமீரகம் ரூ.700 கோடி உதவி அளிக்க முன் வந்தது.   அதை மத்திய அரசு மறுத்து விட்டது.

இது குறித்து நாடெங்கும் கடும் வாக்குவாதங்கள் நடைபெற்று வருகின்றன.  சுனாமியின் போது  அளிக்கப்பட்ட உதவிகளை அப்போதய பிரதமர் மறுத்ததாகவும் இது கொள்கை அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு எனவும் பாஜக கூறி வருகிறது

இது குறித்து நெட்டிசன் ஒருவர் குஜராத் பூகம்ப சமயத்தில் பாஜக அரசு பல வெளிநாட்டு உதவிகளை ஏற்றுக் கொண்டதை சுட்டிக் காட்டி உள்ளார்.   அத்துடன் கார்கில் போர் நடந்து ஒரு சில வருடங்களே ஆன போதிலும்  பாகிஸ்தான் உதவியையும் அப்போது பாஜக அரசு ஏற்றுக் கொண்டதை குறிப்பிட்ட அவர் பாஜகவை கேரளா நிராகரித்து வருவதால்  இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என ஐயம் தெரிவித்துள்ளார்.

அவர் கொடுத்துள்ள விவரங்கள் பின் வருமாறு :