மோடியை புகழும் விசு : கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்

சென்னை

மோடியை புகழ்ந்த பழம்பெரும் இயக்குனர் விசுவை நெட்டிசனக்ள் கடுமையாக விமர்சிக்கின்றனர்.

 

பிரபல பழம்பெரும் இயக்குனர் விசு பல தமிழ் திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதி வந்தார்.  மணல் கயிறு திரைப்படம் மூலம் இயக்குனராக மாறினார்.   அவருடைய படங்களுக்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.

அதன் பிறகு அவர் தொலைக்காட்சியில் நடத்திய அரட்டை அரங்கமும் மிகவும் பிரபலமான நிகழ்வாக இருந்தது.   முதலில் அதிமுகவில் இருந்த அவர் தற்போது பாஜகவில் இருக்கிறார்.   வயது மூப்பு காரணமாக அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் நடிப்பு ஆகிய எதிலும் ஈடுபடாமல் உள்ளார்.

அவர் சமீபத்தில்”நாடு நல்ல திசையை நோக்கிச் சென்றுக் கொண்டிருப்பதற்கு காரணகர்த்தா மோடிதான்” என தெரிவித்துள்ளார்.  இந்த தகவல் விகடன் அதிகார பூர்வ டிவிட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.   அதற்கு நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் தெரிவித்துள்ளனர்.

Thanx : Vikatan twitter

 

Leave a Reply

Your email address will not be published.