கடைசி வாய்ப்பு.. புரிந்துகொள்ளுங்கள் ரசிகர்களே…

கடைசி வாய்ப்பு.. புரிந்துகொள்ளுங்கள் ரசிகர்களே…
ரஜினிகாந்த் குறித்த நெட்டிசன் ஏழுமலை வெங்கடேசனின் முகநூல் பதிவு
ரஜினியின் நேற்றைய கடிதத்திலிருந்து ஆரம்பிப்போம்.
”நான் அரசியலுக்கு வராதது பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று சிலர், ரஜினி மக்கள் மன்ற பதவி kபொறுப்பிலிருந்தும், மன்றத்திலிருந்தும் நீக்கப்பட்ட பலருடன் சேர்ந்து சென்னையில் ஓர் நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறார்கள்.
கட்டுப்பாட்டுடனும், கண்ணியத்துடனும் நடத்தியதற்கு என்னுடைய பாராட்டுகள், இருந்தாலும் தலைமையின் உத்தரவையும் மீறி நடத்தியது வேதனையளிக்கிறது. தலைமையின் வேண்டுகோளை ஏற்று, இங்க நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளாத மக்கள் மன்றத்தினர்க்கு என்னுடைய மனமார்ந்த நன்றி”
என்ன மாதிரியான வாசங்கள் இவை?
அதாவது மன்றத்திலிருந்து நீக்கப்பட்டவர்கள் உத்தரவையும் மீறி போராட்டம் நடத்தியிருக்கிறார்களாம்.ஆனால் கண்ணியத்துடன் நடத்தியிருக்கிறார்களாம், அதற்குப் பாராட்டாம்.
அதே வேளையில் தனக்கு எதிரான நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாதவர்களுக்கு மனமார்ந்த நன்றியாம்..
ரஜினி என்ன சொல்லவர்றார்னு நீங்களே யோசியுங்கள் ரசிகர்களே? தென்னை மரத்தில் ஒரு குத்து ஏணி சின்னத்தில் ஒரு குத்துன்ற வடிவேலு காமடி டைப்..
அடிக்கடி மன்றத்தினர் சிலர் வசூல் செய்து எனக்கு கெட்ட பெயரை ஏற்படுத்துகிறார்கள் ரஜினி சீறுவார்
ஒரு ரசிகர் மன்றம் போன்ற அமைப்பு என்றால் எல்லா நற்காரியங்களுக்கும் செயல்பாடுகளுக்கும் எப்போதுமே ரசிகர்கள் சொந்தக்காசை போடமுடியுமா?
பணம் தேவைப்படும்போது உதவி கேட்டு பலரை அணுகத்தான் செய்வார்கள்.. அரசியல் கட்சிகள், சாதி அமைப்புகள் பல்வேறு இயங்கங்கள் உலகம் முழுவதும் இப்படித்தான் தங்களை வளர்த்துக்கொள்ள இன்றளவும் ஓடிக்கொண்டிருக்கின்றன.
ஆனால் ரஜினியை பொருத்தவரை, வசூல் செய்யும் ரசிகர்கள் அயோக்கியர்கள்.. இப்படி கொடுமையாக சித்தரிப்பதுதான் தன்னை நம்பும் ரசிகர்களுக்கு ரஜினி செய்யும் கைமாறாரா?
அப்புறம் இன்னொரு சைக்கோத்தனமான அணுகுமுறை.. ரசிகர் மன்றத்தினர் பல்வேறு கட்சியினருடன் தொடர்பு வைத்திருப்பது மாபெரும் குற்றமாம்.. அது பற்றி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவது..
அதாவது மன்ற நிர்வாகிகள், திருட்டுப்பயல்கள்.. ஆனால் நாட்ல இருக்கிற எல்லா கட்சி தலைவர்களுடன் ரஜினி மட்டும நேரடி தொடர்பில் இருப்பாரு? ஒரு நியாயம் தர்மம் வேணாமா?
இவரே, ஒரு கட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ளவரிடம் தொடர்பு வைத்துக்கொண்டு ஒரே நாளில் தன் மன்றத்துக்கு கூட்டிவந்து தலைமை பொறுப்பை கொடுப்பாராம். சரி அவராவது மக்கள் மனம் கவர்ந்த தலைவரான்னு பார்த்தா அதுவும் கிடையாது. ரசிகர்களுக்கே அவர் யாருன்னு தெரியலை..
ஒரு காலத்தில் சத்திய நாராயணன் என்பவர் மன்றத்தலைவரா இருந்தாரு.. ரஜினிக்கு இணையாக ரசிகர்கள் அவரை மதித்தார்கள். அந்த அளவுக்கு நெருக்கம் இருந்தது..
அதுக்கப்புறம் ரஜினி தன்னுடைய பக்கத்துல மன்ற தலைமைன்னும் ஆதரவாளர்கள்ன்னும் நிக்க வைக்கிற ஆளுங்கள பாருங்க..எல்லாருமே வேர்ல்ட் ஃபேமஸ்.. படுபயங்கரமான அறிவாளிங்க..
இவ்வளவு தகாத செயல்களை செய்து கொண்டு ரசிகர்கள் மீது குற்றச்சாட்டு ரசிகர்களுக்கு கடுமையான உத்தரவு.. பாவம் என்னதான் செய்யவேண்டும் அந்த ரசிகர்கள்?
மேலும் மேலும் என்னை புண்படுத்தாதீர்கள் என்று ரஜினி போட்ட டுவிட் பக்கத்தில் போய் பார்த்தால் அவரது ரசிகர்கள் வெளியே அவமானமாக இருக்கிறது தூக்கு மாட்டிக்கொண்டு சாகலாம் என்று கதறுகிறார்கள்..
உண்மைதான் அந்த அளவுக்கு ரஜினி ரசிகர்கள் பல்வேறு தரப்பினரால் கேலிக்குள்ளாக்கி இருக்கிறார்கள்.
ஒருவரை நம்பி ஏமாறுவது தவிர்க்க முடியவில்லை என்றால், ஏமாந்து விட்டோம் என்பதையாவது உணர்ந்து அடுத்த காரியத்தில் பார்க்க போய்விடுவதுதான் நல்ல செயல்.
மகள் திருமணத்துக்கு விருந்துவைப்பேன் என்று சொல்வது, வாழவைத்த ரசிகர்களுக்கு எதையாவது செய்தே தீருவேன் என்று எதையாவது சொல்வது.. .ஆனால் எதையுமே எப்போதும் செய்யாதது. இதுதானே இதுவரை நடந்த உண்மை.
யோசித்து பாருங்க.. ரஜனியை நம்பியிருந்த ரசிகர்களில் நிர்வாகிகளில் யார் எந்த வகையில் பெரிய அளவில் வளர்ச்சி பெற்றிருக்கிறார்கள்? அவருடைய தொடர்புகள் அணுகுமுறை, ஆர்வம் அக்கறை போன்றவை சாமான்ய ரசிகர்கள் எவ்வளவு தூரம் இருந்தன?
இனியும் கூட ரஜினியை நடிகராக உங்க இஷடத்திற்கு கொண்டாடுங்கள்.. ஆனால் அதைத்தாணடி இம்மியளவும் போகாதீர்கள்.. மறுபடியும் மறுபடியும் ஏமாந்துதான் போவீர்கள்
இதையெல்லாம் நாம் சொன்னால், எங்க தலைவன் என்ன சொன்னாலும் எங்களுக்கு வேதவாக்கு என்பார்கள். அதனால் கடைசியாக ஒன்றை சொல்கிறோம்..
இந்த மனநிலைக்கெல்லாம் மருந்தே கிடையாது..