கீழடி விவகாரம்… நம்ம சிற்றறிவுக்கு சொல்றோம்

கீழடி குறித்த நெட்டிசன் ஏழுமலை வெங்கடேசன் பதிவு

கீழடி விவகாரம்… நம்ம சிற்றறிவுக்கு சொல்றோம்

2600 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழனின் வாழ்வில் தெரியவருகிறது..

அந்த கட்டத்திற்கு பிறகு, தமிழிலிருந்து வெவ்வேறு மொழிகள் உருவாகியிருக்கலாம். இனக்கலப்புகள், வெளியினங்கள் வந்து ஆக்கிரமிப்பு என பல சம்பவங்கள் நடந்து வரலாறு மாறியிருக்கும்..

ஆனால் இப்படி மாற்றங்கள் நடக்க வெகுகாலம் பிடித்திருக்கும். இவ்வளவுக்கிடையில் தமிழினம் கொண்டிருந்த அறிவுசார் பக்கங்களை ஆராய்வதுதான் முக்கியம்.

நம் வரலாற்றை நாமே நம் முன்னோரின் அறிவாற் றலை ஆதாரமாக வைத்து எழுத வேண்டும்.

வண்ண மயமான வாழ்வின் அடையாளங்களை வெளிச்சொல்லும் வகையில் பல்வேறு இலக்கியங் களை படைத்திருக்கிறார்கள்.

பின்னால் வந்தவர்கள் காலம் காலமாய் தாங்கிநிற்கும் வானுயர்ந்த கற்கோவில்களை நிர்மாணித்திருக் கிறார்கள்,

பல லட்சம்கனஅடி பாயும் காவிரியை மடக்கி,,அதன் ஆழத்தின் அடிக்கேபோய் பீடம் அமைத்து கல்ல ணை என்ற தடுப்பணையைத்தான் கட்டியிருக்கிறார்கள், ஆற்றை பல பகுதிகளுக்கு மடை மாற்ற தெரிந்த அவர்களுக்கு மேட்டூரில் பீரமாண்ட ஒரு நீர்தேக்கத் தைகட்டவேண்டும் என்று தோன்றியிருக்காதா?

ஒரு சாமான்யனாக நமக்குப்படுவது, பிரமாண்ட அணையை கட்டுவதைவிட ஆற்றின் நீரை கொண்டு பெரும் அளவில் தேக்கிவைக்க ஏரி குளங்கள், கால்வாய்கள் போன்றவற்றைத்தான் அதிகம் வெட்டியிருக்கிறார்கள்.

நீர் மேலாண்மை, கட்டிடதொழில்நட்பம், உணவே மருந்து, ஆடல் பாடல் அறிவியல்பூர்வ பின்பற்றல்கள் என தமிழனின் சிறப்பை பல இலக்கியங்கள் சொல்கின்றன.

இடைப்பட்ட காலத்தில் இத்தகைய தமிழனின் அறிவு சார் உடமைகள், எங்கே மறைக்கப்பட்டன, மடைமாற் றப்பட்டன என்பதையும் தோண்டவேண்டியது மிகவும் அவசியம், எந்தெந்த துறைகளில் யார் யார் நிபுணத்துவம் கொண்டுள்ளனரோ, அந்த துறையில் உள்ளவர்கள், தங்கள் காலடியில் கிடக்கும் தமிழன அறிவை தோண்டிப்பார்த்தாலோ போதும்.

உதாரணத்திற்கு இன்றைக்கு நேனோ டெக்னாலஜி என்கிறார்கள். அதை அந்த காலத்திலேயே இலக்கி யங்களில் குறிப்பிடும் தமிழ் சொற்கள் இருப்பதாக சொல்கிறார்கள்.

மூச்சுகாற்றை வைத்து, உருவாகியிருக்கும் கரு ஆணா பெண்ணா என்றெல்லாம் கற்றறிந்து வாழ்ந்ததாக படித்திருக்கிறோம்.

அதையெல்லாம் தோண்டுவதை விட்டுட்டு, தயவு செய்து திராவிடன், தெலுங்கன், இந்து கடவுகள் என்று அடித்துக்கொண்டு சாகாதீர்கள், அப்படி அடித்துக்கொள்ப வர்களிடமிருந்து விலகி ஓடிவிடுங்கள்.

தமிழனின் வரலாற்றை தோண்டுயெடுக்க சொல்வது, பெருமை பேசுவதற்காக மட்டுமல்ல, பழங்கால அறிவுமேல், இந்தகால அறிவை செலுத்தி புது யுகம் படைக்கவும்தான்.

எந்தக்காலமானாலும் சரி, தமிழ் சிந்தனை கொண்ட எல்லா தலைமுறைக்கும் நிறைவான அறிவுண்டு என்பது புரிந்துகொண்டால், எல்லாமே சிறப்பா விளங்கும்

கார்ட்டூன் கேலரி