தமிழ் திரையுலகின் முன்னணி நாயகியான அஜித்துக்கு பிறந்தநாளை முன்னிட்டு, இணையத்தில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.அஜித்தின் 48-வது பிறந்த நாளை உலகம் முழுவதும் உள்ள அவருடைய ரசிகர்கள், வெகு விமர்சையாக கொண்டாடி வருகிறார்கள.

இந்திய அளவில் #HappyBirthdayThala என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட்டாகி வருகிறது.#HBDIconicThalaAJITH, #HappyBirthdayAjith, #HBDAjithkumar, #HBDThala உள்ளிட்ட பல ஹேஷ்டேக்குகள் அஜித் பிறந்த நாளுக்காக உருவாக்கப்பட்டு ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.

மேலும், திரையுலக பிரபலங்களும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் அஜித்துக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் தொடங்கப்பட்ட போது, மே 1-ம் தேதி வெளியீடு என்று தான் அறிவிக்கப்பட்டது. ஆனால் படப்பிடிப்பு தாமதம், ‘விஸ்வாசம்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றி ஆகியவற்றால் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.