ஜக்கி வாசுதேவும் திருமாவளவனும்!

இளங்கோ பிச்சாண்டி(   lango Pichandy)  அவர்களின் முகநூல் பதிவு:

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர்   திருமாவளவன் அவர்கள் தொண்ணூறுகளில்   ஜக்கி வாசுதேவிடம் யோகா கற்கச் சென்றார்.    மாதக் கணக்கில் அந்த ஆசிரமத்தில் தங்கி   யோகா கற்று அதன்பின் இல்லம் திரும்பினார்.

ஜக்கி வாசுதேவின் போதனை மூலம் தாம் பெற்ற  பயன்களை பற்றி பல்வேறு கூட்டங்களில் பேசி   இருக்கிறார்.  இவை யாவும் அந்தக் காலக்கட்டத்தில்   செய்திகளில் அக்கறை கொண்ட அனைவருக்கும்  தெரியும்.

ஜக்கி - திருமா
ஜக்கி – திருமா

பின்னர் “சவுக்கு”, “வினவு” ஆகிய இணையதளங்களில்  ஜக்கியின் பித்தலாட்டங்களும் மோசடிகளும்  அம்பலப்படுத்தப் பட்டன.   தமிழகத்தின் பெரும் பணக்காரர்கள், தொழிலதிபர்கள்,  அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் ஆகியோர் பலரும்   ஜக்கியின் காலடியில்  கிடந்தனர்.

மிகப்பெரிய முற்போக்காளர், பகுத்தறிவாளர் என்று   உரிமை கோரும் திருமாவளவன் போன்றவர்களே   ஜக்கியின் தொண்டரடிப்பொடிகளாக மாறிப்  போன பின்னர் சராசரி மனிதன் என்ன செய்வான்?

பாவம்… அவனும் அடிமையாகிப் போனான்!

இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியானது    வரும் ஆகஸ்டு 17, 2016 இல் மத்சசார்பின்மைப்  பாதுகாப்பு மாநாடு நடத்த இருப்பதாக அறிகிறேன்.  ஜக்கி வாசுதேவ் போன்ற மோசடிச் சாமியார்கள்   மீது ஏதேனும் கண்டனத் தீர்மானம் கீர்மானம் நிறைவேற்றப் படலாம் என்று எதிர்பார்ப்போம்!

Leave a Reply

Your email address will not be published.