கிருஷ்ணசாமி, தலித் நிர்வாணத்தை கண்டுகொள்ளாதது ஏன்?: நெட்டிசன்கள் கேள்வி

--

நெட்டிசன்:

(வாட்ஸ்அப் பதிவுகள்)

புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களே…

உ.பி.யில் காதலர்கள் இருவரை சுற்றிவளைத்த கும்பல் அவர்கள் தலித்துகள் என்று தெரிந்ததும், இருவரையும் நிர்வாணமாக்கி, நடுவெயிலில் வெறுங்காலில் ஒருவரை ஒருவர் தூக்கிக் கொண்டு நடக்க வைத்து சித்தரவதைப்படுத்தி, அதை வீடியோவாகவும் எடுத்து சமூக வலைத்தளங்களில் போட்டிருக்கின்றனர்.

மனிதாபிமானமற்ற மனித உரிமையை காலில் தூக்கிப்போட்டு நடத்தப்பட்ட வன்முறை….

சேரி பிஹேவியர் என்ற வார்த்தைக்காக தாழ்த்தப்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டதாக ரூ.100 கோடி கேட்டு வழக்கு போட்டிருக்கும் பாஜகவின் புதிய கூட்டாளி ஐயா புதியதமிழகம் கிருஷ்ணசாமி பாஜக ஆளும் மாநிலங்களில் நடக்கும் இதுபோன்ற தலித்துகளுக்கு எதிரான கொடுமைகளுக்கு என்ன செய்ய போகிறீர்கள்?

கமல் , காயத்ரி ரகுராம் , விஜய் டிவி முதலாளிகள் சேரி பிஹேவியர் என்ற வார்த்தையை பயன்படுத்தியதால் அடித்தட்டு மக்கள் கடுமையாக பாதிப்படைந்ததால் ₹.100 கோடி மட்டும் நஷ்ட ஈடு தர வேண்டும் என்கிறீர்கள்.

நீங்கள் கூட்டணி வைத்துள்ள பாஜகவினர், சுப்ரமணியம் சாமி போன்றோர் ஒழுங்காக பேசுகிறார்களா? பொது மேடைகளிலேயே பகீரங்கமாக மத , ஜாதி துவேஷத்தை தூண்டுகின்றனர். சுப்ரமணியம் சுவாமி ஒருபடி மேலே போய் “தமிழ்நாட்டுக்காரா காவிரி தண்ணீ கேக்கறா இவாளுக்கு இதுதான் எடுப்பதே வாடிக்கை. வேண்டுமானால் கடல் நீரை குடிநீராக்கி கொள்ளுங்கள்” என்று திமிராகக் கூறுகிறார்.

ஜல்லிக்கட்டுக்காக போராடிய மக்களை தமிழ் பொறுக்கீஸ் என்று பல தடவை சுனா சாமி திட்டினார்.

அதுமட்டுமா.. சாதாரண அடித்தட்டு மக்களுக்கு கிடைக்கும் மாட்டிறைச்சி மீதே கை வைக்கிறது மத்திய பாஜக அரசு.

 

நீட் தேர்வு சரியென்கிறார்கள். இதனால்  கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்பட வில்லையா?

சிந்தியுங்கள் கிருஷ்ணசாமி அவர்களே..!