Random image

நெட்டிசன் விமர்சனம்L 96

Sumitha Ramesh அவர்களின் முகநூல் விமர்சனம்:

சுதந்திர மனிதராக, முரட்டு ட்ராவல் போட்டோகிராபராக விஜய் சேதுபதி ராம் ஆக அறிமுகமாகிறார்.

கெத்து,திமிர்,கண்டிப்பு என பெரிய மனுஷத்தனமாக தெரிபவர் தஞ்சாவூரில் நம்மையும் 96 க்குள் இழுத்துப்போடுகிறார்.

மெட்ரிகுலேசன் பள்ளிக்குள் வி.சேதுபதி நுழையும்போதே நம்மையும் ஒரு ஃப்ளாஷ் பேக் இருக்கு என டைரக்டர் தயார் செய்கிறார்.

பத்தாம் வகுப்பையும் அந்த டீச்சரின் இங்கிலீஷ், புக்ஸ்,எக்ஸாம்ஸ்,க்ளாஸ் ரூம் என அனைத்திலும் நாம் காட்சிகளால் கட்டப்பட்டு அந்த டெஸ்கில் ஒருவராக அமர்வது ப்ளஸ்.

ஐயோ..அப்பறம் !! ?? எண்ணும் விதத்தில் கதை கொஞ்சம் ஸ்லோவாகவே நகர, முதல் பாதியில் முன்கதை தந்து அடுத்து இருக்கு என இயக்குனரின் திரைக்கதை யின் பலம் தெரிகிறது.

விஜய் சேதுபதி – கே “ராமசந்திரனாக” வாழ்ந்திருக்கிருக்கிறார். வழக்கமாக ஸ்பாண்டேனியஸ் டயலாக்ஸ் ல் மடக்கிப்போடுவர் இதில் நடிப்பில் மில்லியன் லைக்ஸ் அள்ளுகிறார்,அதிலும் நீ ஆம்பள நாட்டுக்கட்டைடா சீனில் காட்டும் வெட்கம்,சிரிப்பு, அந்த த்ரிஷா முதல் புடவை அழகை சொல்லும் இடம்,ஏர்ப்போர்ட் சீன்,யமுனைஆற்றிலே பாடல் எமோட் காட்சி, ஜானுவிற்கு திருஷ்டி,தாலிக்கு வணக்கம் என வரிசைக்கட்டி சொல்லலாம்.

டிபிக்கல் பேச்சுலரின் உடல்மொழி,தேக்கி வைத்த காதல் என மனிதர் அதகளம் புரிகிறார். கொடுத்துவச்ச தமிழ் சினிமா !
ஜூனியர் சேதுபதியாக எம் எஸ் பாஸ்கர் மகன் ஆதித்யா குட் சாய்ஸ்.

த் ரிஷா ஜானு,ஜானகி தேவியாக செகண்ட் ஹாஃப் இன் காதல் தேவதை ! அழுகை,சிரிப்பு,காதல்,ஏக்கம் அத்தனையும் அள்ளித்தரும் சிம்ப்ள் அழகு தேவதை.மூன்றே காஸ்டியூம்..அதிலும் அளவான மேக்கப்.
குரல் உதவி சின்மயி பின்னணியும் பாடுவதால் மிகவும் ஒன்றிப்போகிறோம்.உள்ளிழுக்கும் ராஜாசாரின் பாடல்கள் 80’s 90’s என அனைவரையும் கட்டிவைக்கின்றன.
ப்ளாஷ் பேக் கௌரி குட்டி ஜானுவும் கண்களில் நிறைகிறார்.

அதே 80- 90’s இன் ஜனகராஜ்,கவிதாலயா கிருஷ்ணன் ஈர்க்கின்றனர்.

முதல்பாதியில் வி.சேதுபதியின் நண்பர்களாக ஆடுகளம் முருகதாஸ்,நடுவில கொஞ்சம் பக்கத்தைக்காணோம் பகவதி,தேவதர்ஸனி சீன்ஸ் நீளாதா என்ற ஆர்வத்தை திணிப்பது 96 ன் ப்ளஸ் !

இயக்குனர் ப்ரேம்குமார் ஒளிப்பதிவாளர் என்பதால் காட்சிகளை கவிதைகளாக்கியிருக்கிறார்.

இரண்டாம் பாதியில் காட்சிகளில் வசனங்களில் ஹ்யூமர் கலந்து இயல்பான ஸ்கிரீன்ப்ளேயில் நம்மைக்கடத்திப்போகிறார்.
ஆண்பெண் நட்பை போற்றவைக்கும் காட்சியமைப்பு.

காமம் கடந்தது காதல்..! காதலின் மொழி காமம் மட்டுமல்ல என்று ஆணித்தரமாக சொல்லும் காட்சிகளில் அப்ளாஸ் அள்ளுகிறார்.

இயல்பான திரைக்கதை, கேரக்டர் தேர்வு,வசனங்கள் என சரியான கலவையில் 96 ஐ கணித்து தந்திருக்கிறார்.
வாழ்த்து பொக்கே ப்ரேம்குமாருக்கு !  💐

*94 ல் 10 த் முடித்தவர்கள் 96 பேட்ச் என சொல்லிக்கொள்வது எப்படி ? 94 ல் பள்ளியைவிட்டு வெளியேறிய ராம் 96 பேட்சில் வகுப்பில் எப்படி சார் ?

சண்முகசுந்தரத்தின் கேமரா ப்பா.. என்ன அழகு ! என நம்மையும் கதையில் அழுத்திப்போடுகிறது. போட்டோகிராபியையும் கற்றுத்தருகிறது இவர் கேமரா ! அழகு !

பின்னணியில் பெடலெடுக்கும் கோபி வஸந்தா காட்சிகளை உறுத்தாத பாடல்களிலும் நம்மை ரசிக்க வைக்கிறார்.குறிப்பா..காதலே காதலே வெளியிலும் ரீங்காரம்.

பள்ளிக்காதலின் நீளத்தை குறைத்திருந்தால்
இன்னமும் சுவாரஸ்யம் கூட்டியிருக்கலாம்

பள்ளிக்காதல் பல படங்களில் பார்த்த சப்ஜெக்ட் என்றாலும் காமத்தையும் கடக்க வைக்கும் காதல் என்பதை இயல்பாக சொல்கிறது இந்த 96

அவசியம் பார்க்கலாம்… கரையலாம்..! துளி கண்ணீருடன் கசிந்துருகலாம். காதலுக்காக காதலால்!

You may have missed