சசிகலா புஷ்பா பின்னணியில் தாதுமணல் தாதாக்களா?   ஒரு அடடே பார்வை!

பத்திரிகையாளர் டி.எஸ்.எஸ். மணி அவர்கள், “கடைசியாகப் பூனை,பையை விட்டு வெளியே வந்துவிட்டது” என்ற தலைப்பில் எழுதிய முகநூல் பதிவு:

திமுக விலிருந்து நீக்கப்பட்ட நிலையில், “சந்தோசம், இனி ப்ரீயா வேலை செய்வேன்” என்றார், சசிகலா புஷ்பா. அவர் தூத்துக்குடி மேயராக செய்த வேலைகள், நகரையே நாறச்செய்துவிட்டது.அப்படியானால், யாருக்காக இனி மாநிலங்களவையில்” ப்ரீ” யாக வேலை செய்வார்? அதற்கு முன்னால், மாநிலங்களவையில், ஜெயல்லிதா தன்னை அடித்தார் என ஒரு குண்டைப்போட்டுவிட்டு, திருச்சி சிவா விடமும், திமுக தலைவரிடமும் மன்னிப்புக்கேட்கிறேன் என்றார். மேடம் கனிமொழி மூலம் மன்னிப்பு சொல்கிறேன் என்றார்.

இவையெல்லாம் யார்,யாரை திருப்திப்படுத்த? காங்கிரஸ் கட்சிக கார்ர்கள எனக்கு முழுமையாக ஆதரவு மாநிலங்களவையில் கொடுத்தார்கள் என்றார். இவையெல்லாம் இரவில் பேசி,திட்டமிட்டபடி, பகலில் மாதிலங்களவையில் நடக்கிறதா?

அணுக்கனிமவளத் தாது மணல் கொள்ளையை தமிழக அரசு தடுத்ததால், “அரசே நடத்தும்” எனக்கூறியதால், அந்தப்பிரபலம் மூலம் அதிமுக வில இவர் நுழைந்ததால், அவருக்கும், துணை போகும் அரசியல் சதிகளுக்கும், உதவும் புதிய வேடமா? “எம்எல்ஏ.க்களைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள” ் என்ற பத்த்தை பயனபடுத்தியவர்கள், படுத்தும் பாடா?

a

ஆந்திர கடலோரம் அதிக அணுக்கனிமத்தாது கண்டுபிடித்து, இங்கே விடலைன்னா அங்கே போவோம் எனப்போனவர்கள்,ஆந்திர முதல்வரையும், வளைத்துப்போட்டதால், இனி வரும் புதிய சட்டத்திருத்தத்தில், ” அணுக்கனிமத் தாது மணலுக்கு, மத்திய அரசு கொண்டுவரும் தடுப்புகளை நீக்க, மாநிலங்களவையில குரல் எழுப்பவேண்டிய புதிய பணியை, இனி ப்ரீயா செய்வேன்” என்ற கூற்றா?

ஏற்கனவே சம்பந்தப்பட்ட ” தாதுமணல்” பிரபலமும், ஆந்திர முதல்வரும், அந்த ” அணுக்கனிமத்தாதுமணல் எடுப்புக கு வரும் தடைகளை நீக்க, சென்ற மாதம் டில்லியில், கனிமவளத்துறையில் அதிகமாக முயன்று தோற்றதால், இந்த மாநிலங்களவையில் மீண்டும் அதைத் தடுக்க இப்படி ஒரு கூட்டு முயற்சியா?   எத்தனை செய்தி அம்பலத்துக்கு வருது?

கார்ட்டூன் கேலரி