தமிழக சட்டசபை தேர்தலில் முதல்முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற உதயநிதி ஸ்டாலினை வாழ்த்திய நடிகர் விஷ்ணு விஷாலை சமூக வலைதளவாசிகள் விளாசிக் கொண்டிருக்கிறார்கள்.

ஜால்ரா அடிப்பது எப்படி என்று விஷ்ணு விஷாலிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும் போல் இருக்கிறது. தேர்தலுக்கு முன்பு வரை உதயநிதி ஸ்டாலினை வாழ்த்தவில்லையே. வெற்றி பெற்றதும் தான் கண்ணுக்கு தெரிகிறாரா?

திமுக எதிர்கட்சியாக இருந்தபோது இப்படி தைரியமாக ஆதரவு தெரிவிக்கவில்லையே. நீங்களும், சூரியும் மாறி மாறி வாழ்த்து தெரிவிப்பது எதற்காக என்பது தெரிகிறது என தெரிவித்துள்ளனர்.