விஷாலை கலாய்க்கும் இணையத்தளவாசிகள்

முன்பெல்லாம் ஒரு திரைப்படம் வெளியானால் அதனைப் பார்த்துவிட்டு தான் முழுவதுமாக அக்குவேறு ஆணிவேர் என விமர்சனம் மூலம் கிழித்து தொங்க விடுவார்கள்.

இப்போது படத்தின் முதல் ஸ்டில்லை பார்த்தாலே போதும் அதிலேயே குளறுபடிகளை கண்டுபிடித்து நக்கல் அடித்து விடுகிறார்கள் அப்பேர்ப்பட்டவர்களின் கையில் அன்மையில் சிக்கியிருப்பது நடிகர் விஷால். மேட்டர் என்னவென்று பார்ப்போம

துப்பறிவாளன் படத்தின் இண்டாம் பாகத்தில் இயக்குனர் மிஷ்கின், நாயகன் விஷால் இருவருக்கும் ஏற்பட்ட பிரச்னையால் விஷால் தானே படத்தை இயக்கப்போவதாக அறிவித்த பின் முதல் முறையாக நேற்று இப்படத்தின் போஸ்டரை வெளியிட்டார்.

போஸ்டரில், தலையில் பெரிய தொப்பி, ரெயின் கோட் சகிதம் செம கெத்தாக கிளம்பி வருகிறார் பின்னணியில் மழையும் பொழிகிறது. இங்குதான் காமெடி ஆரம்பம். உடம்பு முழுக்க ரெயின்கோட்டால் மூடியிருக்கும் விஷால் கையில் குடை வேறு வைத்திருக்கிறார்..

இதைத்தான் இணையத்தள வாசிகள் கிண்டலடிக்கிறார்கள்..
இப்டி தான் நம்மாளு ஒருத்தன் பஸ்ல போறப்போ ரெண்டு டிக்கெட் எடுத்தானாம். ஏம்பா நீ ஒருத்தனுக்கு ரெண்டு டிக்கெட் எடுக்குறனு கேட்டதுக்கு ஒரு டிக்கெட் தொலைஞ்சி போனா என்னா பண்றது, அதான் ரெண்டா எடுக்குறேன்னு சொன்னானாம். சரி இன்னொரு டிக்கெட்டும் தொலைஞ்சு போயிட்டா என்னா பண்ணுவனு திரும்பவும் கேட்டதுக்கு, நான் என்ன லூசா… அதான் சீசன் டிக்கெட் வெச்சிருக்கேனேனு புத்திசாலித்தனமா பதில் சொன்னானாம்….

-லட்சுமி பிரியா.