வட்டி விவகாரம்.. கமலைப் பின்பற்றுங்கள்!

ங்கியில் பணியாற்றிய ஸ்ரீராம் (Shriram Tkl ) அவர்களின் முகநூல் பதிவு:

ங்கர், குஷ்பு, அர்ஜுன், சிவாஜி குடும்பத்தினர், அபிராமி ராமனாதன், சௌந்தர்யா ரஜினிகாந்த், கௌதம் வாசுதேவ மேனன், இன்னும் பலர் வங்கிகளில் கடன் வாங்கி தான் படம் எடுக்கின்றனர்.. எடுத்து இருக்கின்றனர். அவர்கள் அதற்கு ஜாமீனாக சொத்து பத்திரங்களையும் கொடுத்து இருக்கின்றனர்.

ஒரு தனியார் வங்கியில் நான் இந்த பிரிவில் வேலை பார்த்த போது நானே லோன் ப்ராஸஸ் செய்திருக்கிறேன். வட்டி 1ரூபா 50 பைசா.. எல்லாமே கணக்கில் வரும். இன்னாருக்கு இன்ன சம்பளம்.. அந்த சம்பளத்தையும் வங்கியே கொடுத்து கணக்கில் வைத்துக் கொள்ளும்.. அப்படியே கடன் வாங்கி அந்த படம் தோல்வி அடைந்தாலும் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது..

ஆனால் இந்த நவீன தற்குறி கூட்டத்திற்கு அதெல்லாம் ஒத்து வராது.. அமீர், சசி, ராம், இவர்கள் எல்லாம் opm.. Other people’s money இல் மஞ்சள் குளிக்கும் ரகங்கள்.. அதோடு நில்லாமல் இதில் வேறு சில மறைமுக கூத்தும் உண்டு. மொத்ததில் நேர்மையாக சினிமா எடுக்க வேண்டும் என்று நினைப்பவன் வங்கி வழியாக நிச்சயமாக படம் எடுக்கலாம்.

இந்த வகையில் கமல்ஹாஸன் பற்றி சொல்லி ஆக வேண்டும். ஆயிரம் மாற்று கருத்துகள் இருப்பினும் அவர் இந்த கடன் விவகாரத்தில் மிகவும் நேர்மையான மனிதர். வங்கியில் வாங்குவார்.. சில சமயம் வெளியில் 4,5 வட்டிக்கு வாங்குவார்.. ஒரு நாள் கூட கணக்கு தவறியது இல்லை. அவருக்கு வட்டிக்கு பணம் கொடுக்கும் ஒரு நபருக்கு, அவர் நடத்தும் ஒரு ஹோட்டலுக்கு நான் வங்கி கடன் கொடுத்த போது கமல் விஷயம் பற்றி சொல்லுவார்.