நெட்டிசன்:

மூத்த பத்திரிகையாளர் நீலா நீலவண்ணன் அவர்களது முகநூல் பதிவு:

தெளிவுபடுத்துங்க கமலஹாசன்…….

விகடனில் உங்களின் பேட்டி வாசித்தேன்.

” என் கோலத்தில் இல்லாத புள்ளிகளை நீங்களாகவே சேர்க்காதீர்கள் “மாதிரியான வரிகள் க்ளாஸ். ஒரே ஒரு விஷயம் உறுத்தியது.

ஆஸ்கருக்கு நாயகன் தேர்வானதாகவும் அதை தெரிவிப்பதற்காக எம்ஜிஆர் வீட்டிற்கு சோபாவில் அமர்ந்தால் தரைக்கு கால் எட்டாத சிறுபிள்ளை ஷ்ருதியையும் அழைத்துச் சென்றதாகவும் தொப்பி இல்லாத தலைவர் எம்ஜிஆரை யாரென அடையாளம் தெரியாததால் ‘ஐயா வணக்கம்’ சொல்லாத ஷ்ருதி, ‘இப்ப பாரேன்’ என தலைவர் எம்ஜிஆர் கெட் அப் பொருத்திக் கொண்டு வந்தவுடன் வணக்கம் சொன்னதாகவும் கமல்ஹாசன் சொல்கிறார்.

1987 தீபாவளிக்கு நாயகன் வெளியானது. ஆஸ்கர் தேர்வுகள் டிசம்பர் இறுதியில் தான் அறிவிக்கப்பட்டன. 1987 டிசம்பர் 24ல் தலவர் எம்ஜிஆர் இறந்துவிட்டார்.

உடல்நலமில்லாமல் இருந்த தலைவர் எம்ஜிஆரை டிசம்பரில் சந்தித்திருக்க வாய்ப்பில்லை. சிவாஜி கணேசனை பார்த்து விட்டு ஞாபகப்பிசகினால் எம்ஜிஆர் என மாற்றிச் சொல்கிறார் என வைத்துக் கொண்டால் கெட் அப் கதை பொருந்தாது.

சரி, ஸ்வாதி முத்யத்தை நாயகன் என தவறாக குறிப்பிட்டிருக்க வாய்ப்புண்டு (அதுவும் ஆஸ்கருக்கு தேர்வானது) என யோசித்துப் பார்த்தால் ஷ்ருதி பிறந்தது ஜனவரி 1986ல். ஸ்வாதி முத்யம் வெளியானது மார்ச் 1986.

பதினொரு மாதக் குழந்தை ‘ஐயா வணக்கம்’ சொல்லுமா? அதற்கும் முன்பு வெளியான சாகர் என்றால் பிறந்திருக்காத ஷ்ருதியை கூட்டிக்கொண்டு எம்ஜிஆர் வீட்டிற்குச் செல்லும் அளவுக்கு விஞ்ஞானம் இன்னும் வளரவில்லை.

எப்படிப் பார்த்தாலும் லாஜிக் உதைக்குது ஆண்டவா ???????