அஞ்சுகிறார் கமல்!: ஆத்திரமான நெட்டிசன்கள்

 

திரைப்படத் தயாரிப்பாளர் அசோக்குமார் மரணத்துக்குக் காரணமான ஃபைான்சியர் அன்புச்செழியன் பெயரைச் சொல்ல கமல் பயப்படுகிறார் என்று நெட்டிசன்கள் கமல் குறித்து அவரது ட்விட்டர் பின்னூட்டத்தில் விமர்சித்திருக்கிறார்கள்.

 

நடிகர் சசிகுமாரின் உறவினரும் அவரது திரைப்பட நிறுவனத்தின் பொறுப்பாளராக இருந்தவருமான அசோக்குமார் கடந்த 21ம் தேதி சென்னையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மதுரையைச் சேர்ந்த ஃபைனான்சியர் அன்புவின் மிரட்டலால் தற்கொலை செய்துகொண்டதாக அவர் எழுதியதாக ஒரு கடிதமும் கைப்பற்றப்பட்டது.

அசோக்குமாரின் தற்கொலைக்கு ஃபைனான்சியர் அன்புதான் காரணம் என்று திரைத்துறையினர் பலர் புகார் கூறி வருகிறார்கள். நடிகரும் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் சங்க தலைவருமான விஷால், இயக்குநர் அமீர், சுசீந்திரன், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா உள்ளிட்ட பலர், அன்புச்செழியனை கைது செய்ய வேண்டும் என்று பேட்டி கொடுத்து வருகின்றனர்.

அதே நேரம் மூத்த நடிகரும் அரசியல் இயக்கம் துவங்கப்போவதாக அறிவித்துள்ளவருமான கமல்ஹாசன் இந்த விவகாரம் குறித்து கருத்து ஏதும் சொல்லாமல் இருந்தார். “எதற்கெல்லாமோ ட்விட் பதிவிடுபவர்கள், கொடூர மவுனம் காக்கிறார்களே” என்று தமிழக பாஜக தலைர் தமிழிசை தெரிவித்தார்.

இந்த நிலையில் தனது மவுனத்தைக் கலைத்த கமல், “கந்துவட்டிக் கொடுமை எழை விவசாயி முதல் பணக்காரர்கள் என நம்பப்படும் சினிமாக்காரர் வரை ஆட்டிப்படைப்பதை சட்டமும் சினிமாத்துறையும் தடுத்தாக வேண்டும். திரு. அசோக்குமாரின் அகாலமரணம் போல் இனி நிகழவிடக்கூடாது. குடும்பத்தார்க்கும் நட்புக்கும் கலைத்துறையின் அனுதாபங்கள்” என்று கமல் ட்விட் பதிவிட்டார்.

இதற்கு நெட்டிசன்கள் பலர், “அசோக்குமார் தற்கொலைக்கு அனுதாபம் தெரிவித்திருக்கிறீர்கள். ஆனால் அவரது மரணத்துக்குக் காரணமான அன்புச் செழியன் பெயரைச்சொல்லக்கூட வில்லையே… நீங்கள் நடித்த உத்தம வில்லன் படத்தைத் தயாரித்தவர் இயக்குநர் லிங்குசாமி, அன்புச்செழியனிடம் கடன் வாங்கினார். படம் தோல்வி அடைந்ததால் பணத்தைத் தர முடியவில்லை. அதற்காக லிங்குசாமி அடுத்து தயாரித்த ரஜினி முருகன் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை அன்புச் செழியன் எழுதிவாங்கிக்கொண்டார். அந்தப் படம் நன்றாக ஓடியும், ஒரு பைசா கூட லிங்குசாமிக்குக் கிடைக்கவில்லை. இதெல்லாம் உங்களுக்குத் தெரியாதா..” என்று நெட்டிசன்கள் பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் கமல் ட்விட்டுக்கு நேரடியாக பின்னூட்டமிட்ட பலரும் கமலை விமர்சித்துள்ளார்கள்.

அவர்களில் சிலரது பின்னூட்டங்கள்…

 

Raja Rajan@psrajarajan

Raja Rajan

எல்லாரும் வற்புறுத்திய பிறகு ஒரு பதிவு போடுறீங்களே சார்.ஆக சிறந்த அரசியல்வாதியாக மாறிட்டீங்க.

 

KAALA Memes

 

யோவ் ஆண்டவரே உமக்கு யார் கந்து வட்டிக்கு பணம் கொடுத்தாங்கனு தெரியா

அவனை பத்தி சொல்லுங்க மொதல்ல அனுதாபம் அப்பறம் தெரிவிச்சிக்கலாம்

அதென்ன ஈயம் பூசின மாதிரி பூசாத மாதிரியும் மொக்க ட்வீ’ட்

 

வாத்தியார்

ஆழ்ந்த அனுதாபங்கள் இருக்கட்டும். அரசியல்வாதியா ஆனபிறகும் அன்பு செழியன்ற பேர் சொல்ல வரல போல😎😎

அதை சொன்னதானா குற்றவாளி இனங்காணுதல் கூடும் நண்பா.

என்னமோ போங்க .

 

தோழி

அன்புசெழியன் பற்றி ஒரு வார்த்தைக்கூட இல்ல…