நெட்டிசன்

இன்று காலை நமது பத்திரிகை.காம் மோடியும் மகாபாரத கதாபாத்திரம் சல்லியனும் : சுவாரஸ்ய தகவல்கள் என ஒரு செய்தி வெளியிட்டு இருந்தது.  இது குறித்து நெட்டிசன்கள்  பலர் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர்.   நமது செய்தியானது வட நாட்டில் அரசியல்வாதிகள் தெரிவித்த கருத்தை கூறியது.  வடநாட்டில் சொல்லப் படும் மகாபாரதத்துக்கும், தமிழ் நாட்டில் சொல்லப்படும் மகாபாரதத்துக்கும் பல வேறுபாடுகள் உண்டு.   ராமாயணமும் அதே போல் மாறுபடும்.   உதாரணத்துக்கு வடநாட்டில் ராவணன் சீதையை கையைப் பிடித்து இழுத்து வலுக்கட்டாயமாக தூக்கி சென்றதாக கூறுவார்கள்.  ஆனால் தமிழ் நாட்டில் சீதையை ராவணன் அவள் இருந்த நிலத்தோடு அவளை தொடாமல் கவர்ந்து சென்றதாக கூறுவார்கள்
நமது செய்தியில் சல்லியன் கர்ணனுக்கு சாரதியாக பாரதப் போரில் இருந்த போது நடந்ததாக சில நிகழ்வுகளை குறிப்பிட்டிருந்தோம்.  நமது செய்தியில்,” கர்ணன் தேரோட்டியின் மகன் என அறியப்பட்டவன்.  அதனால் சல்லியனுக்கு கர்ணன் மேல் மதிப்பில்லை.  அவருடைய மருமகன் அர்ஜுனனுக்கு ஒரு போட்டியாளன் கர்ணன் என்பதால் கர்ணன் மேல் சல்லியனுக்கு மிகவும் துவேஷம் இருந்தது.   தேரை செலுத்தும் போதே கர்ணனை தாழ்த்தியும், அர்ஜுனனை உயர்த்தியும் பேசுவது சல்லியனின் வழக்கம்.    அந்த கால வழக்கப்படி தேரோட்டிகள் எதிரியின் பலவீனத்தைப் பற்றி தேரிலுள்ள மன்னனுக்கு அறிவுரை வழங்குவார்கள்.  ஆனால் சல்லியன் அதற்கு நேர்மாறாக கர்ணனின் பலவீனத்தையும், அர்ஜுனனின் பலத்தையும் பற்றிக் கூறி கர்ணனுக்கு தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார்.  இறுதியில் கர்ணனின் தேர்ச்சக்கரம் மண்ணில் மாட்டிக் கொண்டது.   வழக்கப்படி அதை தேரோட்டி எடுத்து உதவ வேண்டும்.   ஆனால் சல்லியன், “தேர்ச் சக்கரத்தை எடுப்பது தேரோட்டி மகனுக்குத் தான் நன்கு தெரியும்.  நீயே அதை எடுத்துக் கொள்” எனக் கூறி விட்டார்” என பதிந்திருந்தோம்.

இந்த நமது செய்தியானது பிரதமர் மோடி  முன்பு தெரிவித்த மகாபாரதக் கதையை ஒட்டி எழுதப்பட்டது

நெட்டிசன்களின் பதிவின் படி ” “சல்யனைப் பற்றி எழுதியிருப்பது முற்றிலும் சரியல்ல. அர்ஜுனனைக் கொல்ல வழிசொல்கிறான். நாகாஸ்திரத்தை ஏவும்போது, அர்ஜுனனின் மார்புக்குக் குறி வைக்கச்சொல்கிறான். கர்ணன் ஏற்கவில்லை. சல்யனிடம் சொன்னான் – நீ ஒரு சாரதி மட்டுமே. போர்முறை பற்றி எனக்கு அறிவுரை நீ சொல்லாதே என்கிறான். அர்ஜுனனின் கழுத்துக்குக் குறிவைக்கிறான். கிருஷ்ணன் தேரை கீழே அழுத்துகிறான். நாகாஸ்திரம் கிரீடத்தைக் கொய்து சென்றது. தேர்ச்சக்கரம் சேற்றில் மாட்டியபோது, கர்ணன் சல்யனை இறங்கி சரி செய்யச்சொல்கிறான். கோபத்துடன் சல்யன் இறங்கிச் சென்றுவிடுகிறான். ”என்பதாகும்.

இந்த நெட்டிசனின் செய்தி தமிழ்நாட்டில் மகாபாரதக் கதையாக வழங்கப்படுவது.    வேறொன்றும் வித்தியாசமில்லை.   அவருக்கு நமது இந்த செய்தியின் முகப்புப் படம் பதில் அளிக்கும்.  இது வடநாட்டில் வழங்கப்படும் மகாபாரதக் கதையின் காட்சி ஆகும்.  இதில் சல்லியன் அமர்ந்திருக்க கர்ணன் சக்கரத்தை சரி செய்யும் காட்சி படமாக உள்ளது.

நமது செய்தியின் லின்க் இதோ:

:https://patrikai.com/the-reason-behind-modi-telling-opposite-parties-as-shalya/