அரைகுறை ஆங்கில இந்தியர் : ஆதரவளித்த அமைச்சர் : டிவிட்டரில் பாராட்டு மழை
டில்லி
மலேசியா வாழ் இந்தியர் ஒருவர் அரைகுறை ஆங்கிலத்தில் எழுதியவருக்கு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் அயல்நாடுகளில் வசிப்போர் டிவிட்டர் மூலம் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். மலேசியாவில் வசிக்கும் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த கேவி என்னும் ஒருவர் அரைகுறை ஆங்கிலத்தில், “நான் இந்தியாவில் இருந்து வருகிறேன் பஞ்சாப். ஆனால் இப்போது மலேசியாவில் இருக்கிறேன்.
என் நண்பர் இங்கு ஒரு மனநோயாளி. அவரை இந்தியா அனுப்ப நான் வேண்டும். ஆனால் இமிக்ரேஷன் சொல்கிறார்கள் உதவி கிடையாது. அவருக்கு வைத்தியம் வேண்டும் உடனடியாக. எனக்கு நன்பன் சிகிச்சைக்கு உதவ நீங்கள் முடியுமா எனது நன்பன் உங்கள் நன்பன் சிகிச்சைக்கு முதலில் வேண்டும்” என பதிந்துள்ளார்.
@SushmaSwaraj @BBCNews @BBCBreaking
I from India in Punjab but I'm now in Malaysia here one my friend mental I want send go back to India but immigration say we are cannot help you first here treatment your friend after can I send India your friend can you ask immigration— Gavy (@Gavy34196087) March 11, 2019
இவ்வளவு பிழையுடன் இந்த டிவிட்டர் பதிவு இருந்ததால் சவுரப் தாஸ் என்பவர். “சகோதரரே, நீங்கள் இந்தி அல்லது பஞ்சாபியில் எழுதலாமே” என ஆலோசனை அளித்துள்ளார். மேலும் பலரும் அவரது ஆங்கிலத்தை விமர்சித்துள்ளனர்.
There is no problem. After becoming Foreign Minister, I have learnt to follow English of all accents and grammar. https://t.co/2339A1Fea2
— Sushma Swaraj (@SushmaSwaraj) March 11, 2019
இதைக் கண்ட சுஷ்மா ஸ்வராஜ், “எனக்கு எவ்வித குழப்பமும் இலை. நான் வெளியுறவுத் துறை அமைச்சராக பொறுப்பு ஏற்றதுமே நான் அனைத்து வகை ஆங்கில உச்சரிப்புக்களையும் இலக்கணங்களையும் கற்றுக் கொண்டு விட்டேன்” என பதிலளித்து கேவியை மேலும் விமர்சனங்களில் இருந்து காப்பாற்றி உள்ளார்.
இதை தொடர்ந்து சுஷ்மாவுக்கு டிவிட்டர் உபயோகிப்போர் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர்.