நியூட்ரினோ திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி ரத்து!:  பசுமைத்தீர்ப்பாயம்  அதிரடி உத்தரவு

சென்னை:

தேனி மாவட்டம் பொட்டிபுரம் மலையில்  நியூட்ரினோ ஆய்வகத்திற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்து  தேசிய தென்மண்டலம பசுமைத் தீர்ப்பாயம் அதரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

மத்திய சுற்றுசூழல் அமைச்சகம் தேனி மாவட்டம் பொட்டிபுரம் மலையில் நியூட்டிரினோ ஆய்வகம் அமைக்க 2011 ஜூன் மாதம் அனுமதி அளித்தது. இதையடுத்து  அங்கு நியூட்டிரினோ ஆய்வு மையம் அமைக்கும் பணி நடந்து வந்தது.

இந்த நிலையில் 2015 ம் ஆண்டு பூ உலகின் நண்பர்கள் அமைப்பினர்  நியூட்டிரினோ ஆய்வு மையம் அமைத்தால், இப்பகுதியின் சுற்றுசுழல் பாதிக்கப்படும் என்பதால் இத்திட்டத்துக்கு  அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்தனர்.

இந்த வழக்கை விசாரித்து வந்த தேசிய தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் இன்று தனது தீர்ப்பை வழங்கியது. அதில் “ஏற்கெனவே: சலிம் அலி நிறுவனம் தாக்கல் செய்த சுற்றுச்சூழல் அறிக்கை செல்லாது. அந்த நிறுவனம் இந்த ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க தகுதியற்றது. ஆகவே நியூட்ரினோ ஆய்வகத்திற்கு வழங்கப்பட்ட மத்திய அரசின் அனுமதி ரத்து செய்யப்படுகிறது” என்று அதிரடியாக  உத்தரவிட்டுள்ளது.