நியூட்ரினோ திட்டம் விசாகப்பட்டினத்துக்கு மாற்றம்?

தமிழகத்தில் செயல்பட இருந்த நியூட்ரினோ திட்டம் ஆந்திரத்துக்கு மாற்றப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது. தமிழகத்தில் சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதில் சிக்கல் நீடித்து வருகிறது.

இதனால் நியூட்ரினோ திட்டத்தை  இடமாற்றம் செய்யப்படுவதாக இந்திய நியூட்ரினோ ஆய்வக இயக்குநர் விவேக் டாடர் தகவல் அளித்துள்ளார்

விசாகப்பட்டினம் மாவட்டம் கொத்தாபெல்லாம் என்ற இடத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைந்துள்ளது.  ஆகவே இங்கு திட்டத்தை மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.