டில்லி,

தேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க அனுமதி அளிக்கும்படி தமிழக அரசுக்கு, மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது.

கடந்த வாரம் இந்திய அணுசக்தி கழகத்தின் தலைவர், சேகர்பாசு தேனியில் நியூட்ரியோ ஆய்வு மையம் விரைவில் தனது பணியை தொடங்கும் என்று கூறிய நிலையில், தற்போது மத்திய அரசு தமிழக அரசுக்கு கடிதம் மூலம் மறைமுகமாக மிரட்டல் விடுத்துள்ளது.

நியூட்ரினோ ஆய்வு திட்டத்தை விரைவில் செயல்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய அமைச்சரவை செயலாளர் பி.கே.சின்ஹாவுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளதாகவும், அதன்படி, த்திய அரசு சார்பில் தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

மத்தியஅரசு எழுதியுள்ள கடிதத்தில்,  நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கும் பணி 2 ஆண்டு களுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.  இத்திட்டத்தை இனியும் தாமதிக்காமல் உடனடியாக நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க தமிழக அரசின் சுற்றுச்சூழல் அமைப்பு அனுமதி அளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய அரசு மறைமுகமாக நியூட்ரினோ திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளதாக கோட்டை வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

கடந்த 18ந்தேதி செய்தியாளர்களை சந்தித்த, இந்திய அணுசக்தி கழகத்தின் தலைவர், சேகர்பாசு : ”தேனி மாவட்டத்தில், ‘நியூட்ரினோ’ ஆய்வு மையம் தனது பணிகளை விரைவில் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.