தனிக்கட்சி இல்லை: அ.தி.மு.க.வே எங்கள் இயக்கம்! டி.டி.வி. தினகரன்

திருச்சி,

ன்று செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், தனிக்கட்சி தொடங்கும் திட்டம் இல்லை என்று கூறினார். மேலும், அதிமுக எங்களின் இயக்கம் என்றும், தேர்தலில் திமுகவுக்கும், எங்களுக்கும்தான் போட்டி என்று கூறினார்.

திருச்சி சங்கம் ஓட்டலில் டிடிவி ஆதரவாளர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதைத்தொடர்ந்து இன்று காலை செய்தியாளரை சந்தித்த டிடிவி தினகரன் கூறியதாவது,

ஆர்.கே.நகர் தேர்தல் தொடர்பாக  நேற்று மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடை பெற்றது. இந்த கூட்டத்தில் தற்போதைய நிலை குறித்து விவாதித்தோம். மேலும், ஆர்.கே. நகர் தேர்தல் குறித்தும், போட்டியிடும் வேட்பாளர் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

ஆர்.கே.நகர் தேர்தலில  போட்டியிடும் வேட்பாளர் யார் என்பது குறித்த நாளை அறிவிக்கப்படும், ஏற்கனேவ தேர்தல் கமிஷன் எங்களுக்கு வழங்கிய தொப்பி சின்னத்தை மீண்டும் கேட்போம் என்றார்.

மேலும் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர்,  ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் இன்னும் என்னுடன் தொடர்பில்தான் இருக்கிறார்கள். தேர்தல் களத்திற்கு எப்போது வருவீர்கள் என்று என்னிடம் தொடர்பு கொண்டு கேட்கிறார்கள் என்று சிரித்துக்கொண்டே கூறினார்.

மேலும், உங்களுக்கும் அதிமுகவுக்கும் போட்டியா என்ற கேள்விக்கு,  இந்த தேர்தலில் எங்களுக்கும், தி.மு.க.வுக்குத்தான் போட்டி என்றும்,  நாங்கள் மற்ற கட்சிகள் ஆதரவை கேட்கவில்லை என்றும்,  வருமான வரி சோதனையின் போது அனைத்து கட்சிகளும் தார்மீக அடிப்படையில் எங்களுக்கு ஆதரவு தெரிவித்தார்கள் என்பதற்காக அக்கட்சிகளின் ஆதரவை கேட்கமாட்டோம் என்று கூறினார்.

இந்த இடைத்தேர்தலில, நாங்கள் தான் வெற்றி பெறுவோம். எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்பதை முதல்கட்ட பிரசாரத்திற்கு பிறகு கூறுவேன். தேர்தல் நியாயமாக நடக்கும் என்று நம்புகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.