ரியோ:
பொழுபோக்கில்கூட துப்பாக்கியை தொடமாட்டேன் என்று அபிநவ் பிந்த்ரா கூறினார்.
ரியோ ஒலிம்பிக்கில் பதக்கத்தை இழந்த அபிநவ் பிந்த்ரா துப்பாக்கி சுடுதல் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

ரியோவில் நடைபெற்ற ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவு இறுதிப் போட்டியில் அபினவ் பிந்த்ரா நான்காவது இடம் பிடித்து பதக்க வாய்ப்பை இழந்தார். இதையடுத்து, துப்பாக்கி சுடும் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து, அபினவ் பிந்த்ரா கூறியதாவது: ரியோ ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஒவ்வொரு சுற்றிலும் என்னுடைய திறமையை மிகச்சிறந்த முறையில் வெளிப்படுத்தினேன். இருந்தாலும் நான்காவது இடத்தையே பிடிக்கக முடிந்ததுது. இதன் காரணமாக பதக்கத்தை இழந்தது சற்று வருத்தமளிக்கிறது. போட்டிகளில் வெற்றி, தோல்வி என்பதை ஏற்றுக்கொள்ளதான் வேண்டும்.
என்னுடைய எதிர்காலத்தை பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. ஆனால் கண்டிப்பாக எனது வாழ்க்கையில் இனி பொழுதுபோக்குக்காக கூட துப்பாக்கியை தொட மாட்டேன்’ என்றார்.
இனிமேயல் இந்திய வீரர்களுக்கு பயிற்சியாளராக போவீர்களா என்ற நிருபரின் கேள்விக்கு, ‘ஒருவேளை நான் பயிற்சியாளரானால், என்னிடம் பயிலும் மாணவர்கள் இரண்டே மணி நேரத்திதல் ஓடிவிடுவார்கள் என நகைச்சுவையாக பதில் அளித்தார். மேலும்  என்னுடைய அமைப்பின் மூலம் துப்பாக்கி சுடுதலில் இளம்  வீரர்களுக்கு ஏற்கனவே சிறந்த முறையில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது. இளைஞர்கள் கடுமையாக உழைத்தால் நிச்சயம் ஒருநாள் வெற்றி நம்மை தேடி வரும்’ என்றார்.
2008ல் நடைபெற்ற ஒலிம்பிக்கில் அபினவ் பிந்த்ரா தங்க பதக்கமும், காமன்வெல்த் போட்டிகளில் நான்கு முறை தங்கப் பதக்கமும் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர் என்பதும்,
ஒலிம்பிக் போட்டிகளில், தனிப்பட்ட வீரராக கலந்து கொள்ளும் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.