காங்கிரஸ் கட்சிக்கு புதிய செயலர்கள் நியமனம்

டில்லி

காங்கிரஸ் கட்சிக்கு 9 புதிய செயலாளர்களை அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி நியமித்துள்ளார்.

கடந்த ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.    அவர் அது முதல் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.   அதை ஒட்டி தர்போது பல்வேறு மாநிலங்களுக்கு புதிய செயலர்களை நியமனம் செய்துள்ளார்.  அவ்வாறு 9 செயலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

காங்கிரச் கட்சியின் பொதுச் செயலாளர் அசோக் கெக்லாட் தனது அறிக்கையில், “காஷ்மீர் மாநிலத்துக்கு ஷகில் அகமது, உத்தரகாண்ட் மாநிலத்துக்கு ராஜேஷ் தமானி, மேற்கு வங்கத்துக்கு பிபி சிங், முகமது சாவீத் மர்றும் சரத் ரவுத் ஆகியோர் நியமிக்கபட்டுள்ளனர்.   குஜராத் மாநிலத்தை சேர்ந்த அல்பேஷ் தாகுர் பிகாருக்கான செயலராக் நியமிக்கபட்டுள்ளர். இது தவிர மகாராஷ்டிராவுக்கு சந்தீப் மற்றும் சல்லா வம்சி ஆகியோர் நியமிக்கபட்டுள்ளனர்.

மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளராக ரேபரேலி சதார் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் அதிதி சிங் நியமிக்கப்பட்டுள்ளர்.   தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளராக சஞ்சய் தத் நியமிக்கப்பட்டுள்ளார்.   இமாசல பிரதேசத்தை சேர்ந்த தீபக் ரதோத் உத்தரகாண்ட் ராஜ்பால் பிஷத் ஆகியோர் கட்சியி ஆய்வு கமிடி உறுப்பினராக நியமிக்கப்பட்டுளனர்” என தெரிவிதுள்ளார்.