சென்னை: வங்கக்கடலில்  காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால், அடுத்த 48மணி நேரத்தில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இந்த தாழ்வு பகுதி 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். வங்கக் கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்று, 12-ம் தேதி வடக்கு ஆந்திர கடற்கரை பகுதியில் கரையைக் கடக்க கூடும். பதிய காற்றழுத்த தாழ்பு பகுதியால் தமிழகம், ஆந்திரா, ஒடிசா மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவள்ளூர், வேலூர் உட்பட 16 மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் எனவும், சென்னையில் அடுத்த இரு தினங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

குமரி மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் 12-ம் தேதி வரை இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.