வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகம் நோக்கி வருகிறது…. ! பாலச்சந்திரன் தகவல்

சென்னை:

ங்கக் கடலில் உருவாக்கி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது வலுப்பெற்று தமிழகம் நோக்கி நகர்ந்து வருகிறது என்று சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறி உள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த  சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி, இன்று தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது.

இந்த காற்றத்தழுத்த தாழ்வு பகுதியானது வலுப்பெற்று தமிழிகம் நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த  காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிலை தமிழகம் மற்றும் புதுவை கடலோரத்தில் நிலைகொள்ள வாய்ப்புள்ளதால், இன்று மாலை முதல்  கடலோரப் பகுதிகள் தொடங்கி படிப்படியாக உள்மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

You may have missed