ஆந்திராவில் புத்தாண்டு முதல் புதிய உயர்நீதி மன்றம்! குடியரசு தலைவர் ஒப்புதல்

அமராவதி:

மராவதியை தலைநகராக கொண்டுள்ள ஆந்திர மாநிலத்தில் புதிய உயர்நீதி மன்றம் அமைக்க குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்கி உள்ளார். இதன் காரணமாக வரும் 1ந்தேதி (ஜனவரி, 2019) முதல் புதிய உயர்நீதி மன்றம் செயல்பாட்டுக்கு வரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் உயர்நீதி மன்றம் ஐதராபாத்தில் உள்ளது. ஆனால், கடந்த 2014ம் ஆண்டு ஆந்திர மாநிலம், ஆந்திரா, தெலுங்கானா என இரண்டாக  பிரிக்கப்பட்டதை தொடர்ந்து ஐதராபாத் தெலுங்கானா மாநிலத்துடன் இணைந்தது.

இதையடுத்து ஆந்திராவின் தலைநகராக அமராவதி உருவாக்கப்பட்டு வருகிறது. இங்கு புதிய உயர்நீதி மன்றம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஆந்திரா மாநிலத்துக்கு தனி உயர்நீதிமன்றம்  வேண்டும் என சில ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், புதிய உயர்நீதி மன்றத்துக்கு  குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

இது தொடர்பாக  உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏகே சிக்ரி மற்றும் அஷோக் பூஷண் அடங்கிய அமர்வு விசாரணை செய்து எற்கனவே அனுமதி அளித்து குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. தற்போது, குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். இதன் காரணமாக புத்தாண்டு முதல் ஆந்திராவில் புதிய உயர்நீதி மன்றம் செயல்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த புதிய நீதிமன்றத்தில் பணியாற்றக்கூடிய நீதிபதிகள் விவரம் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

You may have missed