பாட்னா:

குழந்தை கடத்தலில் ஈடுபட்டு சிபிஐ விசாரணைக்குள்ளானார். பின்னர் பாஜகவில் சேர்ந்தார். இப்போது பீகார் டிஜிபி ஆகியிருக்கிறார் குப்தேஷ்வர் பாண்டே.


1987-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வான குப்தேஷ்வர் பாண்டே, பீகாரில் பணியில் சேர்ந்தார். அவர் 2012-ம் ஆண்டு ஐஜியாக இருந்தபோது, நில விவகாரம் தொடர்பாக 12 வயது சிறுமியை கடத்தியதாக புகார் எழுந்தது.

இது குறித்து பாண்டேயிடம் சிபிஐ விசாரணை நடத்தியது. இதன்பின்னர் இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
வீட்டிலிருந்த சற்றுத் தொலைவில் கிடந்த மண்டை ஓட்டை வைத்து, அது கடத்தப்பட்ட சிறுமி என்று போலீஸ் முடிவுக்கு வந்தது.

எனினும், என்றாவது ஒருநாள் தங்கள் மகள் திரும்பி வருவாள் என பெற்றோர் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், தானாக ஓய்வு பெற் பாண்டே, கடந்த 2014-ம் ஆண்டு பாஜக சார்பில் தேர்தலில் போட்டியிட முயற்சித்து பாஜகவில் சேர்ந்தார். சீட் கிடைக்கவில்லை.

கடந்த 9 மாதங்களுக்கு முன்பு பாண்டேவை மீண்டும் பணியில் சேர்த்துக் கொண்டார் முதல்வர் நிதீஷ்குமார். இதனையடுத்து தற்போது பாண்டே பீகார் மாநில டிஜிபியாகியிருக்கிறார்.
k.