புதிய பாட புத்தகங்கள் வெளியீடு

சென்னை:

ந்த கல்வி ஆண்டு முதல் மாற உள்ள  1,6, 9, 11ஆகிய வகுப்புகளுக்கான புதிய பாடப் புத்தகங்கள் இணையதளத்தில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த மாதம் (மே)  23ம் தேதி இணையத்தளத்தில் வெளியிடப்பட இருப்பதாக தமிழகப் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

வரும் கல்வியாண்டில் 1, 6, 9, 11ஆகிய வகுப்புகளுக்குப் புதிய பாடப்புத்தகங்கள் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. தற்போது பாடப்புத்தங்கள் அச்சடிக்கும் பணி முடிவடைந்து பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இந்த வருடம்  மாறும் அனைத்து பாடப்புத்தகங்களும் இணையதளத்திலும் வெளியக இருப்பதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்து உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும், வரும் 23ந்தேதி நாள்  www.tnscert.org என்கிற இணையத்தளத்தில்  இருந்து யார் வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

மேலும் கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் தொடக்க வகுப்புகளில் 25 சதவிகித இடங்களில் ஒதுக்கப்பட்டு வருவதாகவும், அதன்படி இதுவரை 80ஆயிரம்  விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் இலவசக் கல்விக்குச் சேர மே 18ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் மேலும் 20 ஆயிரம் இடங்கள் தனியார் பள்ளிகளில் இலவசக் கல்விக்கான ஒதுக்கீட்டில் காலியாக இருப்பதாகவும் தெரிவித்து உள்ளது.