டோக்கியோ:

ப்பானில் தயாரான புதிய மாடல் புல்லட் ரயில் சோதனை வெற்றிகரமாக அமைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.. மணிக்கு 224 கி.மீ (360 கிமீ) வேகத்தில் இந்த புல்லட் ரயில் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது.

ஜப்பானில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு முன்பாகவே இந்த புல்லட் ரயில் சேவையை அறிமுகப்படுத்த ஜப்பான் முடிவு செய்துள்ளது. இந்த புல்லட் ரயில், தற்போது உள்ள ரயில்களை விட இலகுவாகவும், பூகம்பம் மற்றும் பல்வேறு இடற்பாடுகளில் இருந்து காத்துக்கொள்ளும் வகையிலும் தயாரிக்கப்பட்டு உள்ளது.  அத்துடன் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன்  எரிபொருள் சிக்கமும் கடைபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய ரக புல்லட் ரயிலின் சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்றது. மைபாரா, கியோட்டோ இடையே இந்த ரயில்சேவை நடைபெற்றதாக ஜப்பான் மத்திய ரயில்வே அறிவித்து உள்ளது.

தற்போது உபயோகப்படுத்தப்பட்டு வரும் புல்லட் ரயிலின் அதிகபட்ச வேகம் மணிக்கு 285 கிலோ மீட்டர் உள்ள நிலையில், தற்போது தயாரிக்கப்பட்ட புதிய ரக புல்லட் ரயில் மணிக்கு 360 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் அமைக்கப்பட்டது புதிய சாதனை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.