சிறுமிகளை அடைத்து வைத்து சித்திரவதை: நித்யானந்தா மீது புது வழக்கு

தனது ஆசிரமத்தில் சிறுமிகளை அடைத்து வைத்து துன்புறுத்தியதாக நித்தியானந்தா மீது குஜராத் மாநில காவல்துறையினர் வழக்கு பதிந்துள்ளனர்.

குஜராத் மாநிலம் அகமதாபாத் பகுதியில் அமைந்திருக்கும் தனக்கு சொந்தமான ஆசிரமத்தில், சிறுமிகளை அடைத்து வைத்து துன்புருத்துவதாகவும், அவர்களுக்கு மூலைச்சலவை செய்து தனக்கு சாதகமாக அவர்களை பேச வைக்க நித்யானந்தா முயற்சிப்பதாகவும் சிறுமிகளின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், நித்யானந்தா மீது அகமதாபாத் காவல்துறையினர் வழக்கு பதிந்துள்ளனர்.

இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள அகமதாபாத் எஸ்.பி பிரசாத், “பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் சித்திரவதை செய்யப்படுவதாக புகார் அளித்துள்ளனர். நித்யானந்தா ஆசிரமம் மீது இதுபோல பல மாநிலங்களில் புகார் உள்ளன. தற்போது வந்துள்ள இந்த புகார் குறித்து விசாரித்து வருகிறோம். உண்மையெனில், நித்யானந்தாவுக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்படும்” என்று தெரிவித்தார்.