டிரம்ப் வருகையால் இந்திய – அமெரிக்க உறவில் புதிய அத்தியாயம் தொடக்கம்! மோடி

அகமதாபாத்:

டிரம்ப்  இந்திய வருகையால் இந்திய – அமெரிக்க உறவில் புதிய அத்தியாயம் தொடங்கப்பட்டு என்றும், புதிய வரலாறு உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அகமதாபாத் ஸ்டேடியத்தில் நடைபெற்ற  ‘நமஸ்தே டிரம்ப்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்தார்.

2நாள் பயணமாக இந்தியா வந்துள்ள டிரம்ப் காலை 11.30 மணி அளவில் அகமதாபாத் விமான நிலையம் வந்தடைந்தார். பின்னர் மதியம் மதியம் 1.05 மணிக்கு அகமதாபாத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் படேல் கிரிக்கெட் மைதானத்துக்கு சென்றார். ‘

அதையடுத்து, ட்ரம்ப்பை வரவேற்று ‘நமஸ்தே ட்ரம்ப்’ நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சியில் டிரம்பை வரவேற்று பேசிய உரையை தொடங்கும் முன் நமஸ்தே ட்ரம்ப், ட்ரம்ப் நீடூழி வாழ்க என பிரதமர் மோடி முழக்கமிட்டார். பிரதமர் மோடியை தொடர்ந்து அரங்கில்  திரண்டிருந்த மக்களும் நமஸ்தே ட்ரம்ப்,வாழ்க என முழக்கமிட்டனர்.

இந்த நிகழ்வின் பெயரின் பொருள் – ‘நமஸ்தே’ மிகவும் ஆழமானது. இது உலகின் பழமையான மொழிகளிலிருந்து வந்த ஒரு சொல் – சமஸ்கிருதம். அந்த நபருக்கு மட்டுமல்ல, அவருக்குள் இருக்கும் தெய்வீகத்திற்கும் நாம் மரியாதை செலுத்துகிறோம் என்பதாகும் என்று அதற்கான விளக்கம் அளித்தார்.

தொடர்ந்து பேசிய மோடி, ‘‘உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு உங்களை மகிழ்ந்து வரவேற்கிறது. இது குஜராத்தாக இருக்கலாம். ஆனால் ஒட்டுமொத்த இந்தியாவும் உங்களை மகிழ்ச்சி பொங்க வரவேற்கிறது. இன்று வரலாறு திரும்பி உள்ளது. 5 மாதங்களுக்கு முன் எனது அமெரிக்க பயணத்தின் போது, ஹவ்டி மோடி நிகழ்ச்சி மூலம் எனக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்று நண்பர் டிரம்ப்புக்காக நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அவர் தனது இந்திய பயணத்தை அகமதாபாத்தில் தொடங்கியுள்ளார். இந்திய அமெரிக்க உறவு என்பது வெறும் கூட்டிணைவு மட்டுமல்ல. அதையும் தாண்டிய நெருக்கமான உறவு. இந்தியா-அமெரிக்கா உடனான நட்புறவு நம்பிக்கை அடிப்படையிலானது என்று புகழாரம் சூட்டினார்.

தொடர்ந்து பேசியவர்,  அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் இந்தியாவின் உண்மையான நண்பர் இருக்கிறார்  என்றவர், “இன்று புதிய வரலாறு உருவாக்கப்பட்டுள்ளதைக் காண முடிகிறது.  இந்த நிகழ்ச்சியின் பெயரான ‘நமஸ்தே’ என்பதன் பொருள் மிகவும் ஆழமானது. இது உலகின் பழமையான மொழியான சமஸ்கிருதத்திலிருந்து வந்த ஒரு சொல். இதன் பொருள், அந்த நபருக்கு மட்டுமல்ல, அவருக்குள் இருக்கும் தெய்வீகத்திற்கும் நாங்கள் மரியாதை செலுத்துகிறோம்.

இவ்வாறு மோடி பேசினார்.