காஷ்மீர் மாநிலத்தில் புதிய தலைமைச் செயலாளர் நியமனம்

ஸ்ரீநகர்

காஷ்மீர் மாநிலத்தில் புதிய தலைமைச் செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார்/

காஷ்மீர் மாநிலத்தில் மெகபூபா முப்தி தலைமையில் அமைந்த அரசுக்கு பாஜக ஆதரவு அளித்து வந்தது.   ரம்ஜானை ஒட்டி நடந்த தற்காலிக போர் நிறுத்த்தை நீட்டிக்க முதல்வர் யோசனை தெரிவித்தார்.   ஆனால் மத்திய அரசு நீட்டிக்க மறுத்து விட்டது.

காஷ்மீர் ஆளுநர் வோரா

மேலும் காஷ்மீரில் பத்திரிகையாளர் ஷுஜாத் புகாரி கொல்லப்பட்டதும்,  ராணுவ வீரர் ஔரங்கசீப் கடத்தி கொல்லப்பட்டதும் மத்திய அரசுக்கு கடும் அதிருப்தியை உண்டாக்கியது.   அதை ஒட்டி மெகபூபா அரசுக்கு அளித்து வந்த ஆதரவை பாஜக விலக்கிக் கொண்டது.   மெகபூபா ராஜினாமா செய்தார்.  எதிர்க்கட்சி ஆட்சி அமைக்க முன் வராததால் காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமைக்கப்பட்டது.

இந்நிலையில் காஷ்மீர் மாநிலத்துக்கு புதிய தலைமை செயலாளராக பி. வி.  ஆர்.  சுப்ரமணியனை ஆளுநர் வோரா நியமித்துளார்.  அத்துடன் ஆளுநரின் ஆலோசகராக இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.   ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார் மற்றும் பி. பி. விலாஸ் ஆகியோர் ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.