தொடர் தோல்வி – சென்னை கால்பந்து அணிக்கு புதிய பயிற்சியாளர்!

சென்னை: ஐஎஸ்எல் தொடரில் பங்கேற்றுவரும் சென்னைக் கால்பந்து அணிக்கான புதிய பயிற்சியாளராக ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஓவன்கோயல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தற்போது உள்நாட்டு கால்பந்துத் தொடரான ஐஎஸ்எல் தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரில், சென்னை அணியின் செயல்பாடு கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. ஏற்கனவே, 2 முறை சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கும் சென்னை அணி, கடந்த சீசன் மற்றும் இந்த சீசனில் மோசமாக செயல்பட்டு வருகிறது.

இந்தமுறை, இதுவரை தான் பங்கேற்றுள்ள 6 போட்டிகளில், ஒன்றில் மட்டுமே வென்றுள்ளது. எனவே, விமர்சனத்தைத் தவிர்க்கும்பொருட்டு, அணியின் பயிற்சியாளராக இருந்த இங்கிலாந்தின் ஜான் கிரகரி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதனையடுத்து, 53 வயதான ஸ்காட்லாந்தின் ஓவன் கோயல் புதிய பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் இந்த சீசன் முழுவதும் பதவியில் நீடிப்பார். “சென்னை அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது பெருமையாகவும் வியப்பாகவும் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.