டில்லி:

இந்திய ஆண்கள் ஹாக்கி அணி தலைமை பயிற்சியாளராக இருந்த ரோலண்ட் ஓல்ட்மான்ஸ் கடந்த செப்டம்பரில் நீக்கப்பட்டார். பெண்கள் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ஜோர்டு மரினே இந்திய ஆண்கள் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

கடந்த நவம்பர் முதல் பெண்கள் ஹாக்கி அணி பயிற்சியாளராக ஹரேந்திர சிங் பதவி வகித்தார். இந்நிலையில், இந்திய ஆண்கள் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ஹரேந்திர சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பெண்கள் அணி பயிற்சியாளரான ஜோர்டு மரினே மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

காமன்வெல்த் போட்டியில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி மிகவும் மோசமாக விளையாடியது. 12 ஆண்டுகளாக இந்திய அணி காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வெல்லாமல் திரும்பியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.