Random image

தெலங்கானாவில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த வேண்டும்…..ஆளுநரிடம் புதிய கூட்டணி வலியுறுத்தல்

ஐதராபாத்:

தெலங்கானாவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று ஆளுநரிடம் புதிய கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

சந்திரசேகரராவ் அரசின் பரிந்துரையை ஏற்று தெலங்கானா சட்டசபை கலைக்கப்பட்டுள்ளது. இடைக்கால முதல்வராக சந்திரசேகர் ராவ் தொடர்கிறார். . மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார் மற்றும் மிசோரம் மாநிலங்களில் இந்த ஆண்டு நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தலோடு தெலங்கானாவுக்கும் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சூழ்நிலையை ஆய்வு செய்ய தேர்தல் ஆணையம் குழு அமைத்துள்ளது.

மீண்டும் வெற்றிப்பெற்று ஆட்சிக்கு வருவோம் என்று சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அங்கு புதிய கூட்டணி உருவாகியுள்ளது. பாஜக கூட்டணியில் இருந்து விலகிய தெலுங்கு தேசமும், காங்கிரசும் கூட்டணி அமைத்துள்ளன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இதில் இடம்பெற்றுள்ளது. இன்று மாலையில் இந்த 3 கட்சிகளின் தலைவர்கள் ஆளுநரை சந்தித்து பேசினர், சட்டசபையை கலைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று என்று வலியுறுத்தியுள்ளனர். .

ந்திரசேகர் ராவ் முதல்வராக தொடர்ந்தால் நேர்மையான மற்றும் சுதந்திரமான தேர்தல் நடைபெறாது. முன்கூட்டியே தேர்தலை நடத்தும் நிலைக்கு தள்ளியதற்கு எதிராக உச்சநீதிமன்றம் செல்வோம் என்றும் தெரிவித்துள்ளனர்.