அயோத்தி நில வழக்கு: நீதியரசர் லலித், ரமணாவுக்கு பதில் புதிய நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அமைப்பு

டில்லி:

யோத்தி வழக்கை விசாரிக்கும் அரசியல் சாசன அமர்வில் இருந்து நீதிபதி யு.யு.லலித், ரமணா  விலகியுள்ளதால் அவர்களுக்கு பதில் புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராமஜென்ம பூமி விவகாரம் தொடர்பான வழக்கை விசாரிக்க தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்டே, என்.வி.ரமணா, யுயு. லலித் மற்றும் டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் கொண்ட அமர்வு ஏற்படுத்தப்பட்டது.

அதைத்தொடர்ந்து வழக்கின் விசாரணை கடந்த 10ந்தேதி உச்சநீதி மன்ற அரசியல் சாசன அமர்வில் விசாரரிக்கப்பட இருந்தது.  அப்போது, இந்த வழக்கில் இருந்து  நீதிபதி லலித் விலகுவதாக அறிவித்தால், வழக்கின் விசாரணை 29ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

அதையடுத்து, லலித்துக்கு பதிலாக புதிய நீதிபதி நியமிக்கப்படுவார் என தலைமை நீதிபதி அறிவித்திருந்தார். அதைத்தொடர்ந்து, நீதிபதி  ரமணாவும் அயோத்தி வழக்கில் இருந்து  விலகுவதாக அறிவித்தார். இதன் காரணமாக அரசியல் சாசன அமர்வு அமைப்பதில் தொய்வு ஏற்பட்டது.

இந்த நிலையில், தற்போது அயோத்தி வழக்கை விசாரிக்கும் புதிய அரசியல் சாசன அமர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

இதில், யு.யு.லலித்துக்கு பதிலாக  நீதிபதி அப்துல் நஷீர், நீதிபதி ரமணாவுக்கு பதில் நீதிபதி அசோக் பூஷனும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

அதன்படி புதிய அரசியல் சாசன பெஞ்சில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்டே,  டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷன், அப்துல் நஷீர்  ஆகியோர் கொண்ட அமர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்த புதிய அரசியல் சாசன பெஞ்சு  வரும் 29ந்தேதி வழக்கை விசாரிக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.