டில்லி,

பீடி, சிகரெட் உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்ய மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

புகையிலை விற்பனை செய்யப்படும் கடைகளில் மிட்டாய், பிஸ்கட், குளிர்பானங்கள் விற்பனை செய்யக்கூடாது என்றும், புகையிலை பொருட்கள் தொடர்பான விளம்பரங்களை அனுமதிக்கக் கூடாது என்றும், பீடி, சிகரெட் போன்ற புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வது குறித்து  உள்ளாட்சி அமைப்புகளிடம் பதிவு செய்ய வேண்டும் என்றும், அவ்வாறு பதிவு செய்வதால் புகையிலைப் பொருட்களின் விற்பனையை கண்காணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குழந்தைகள் மற்றும் இளம் சிறுவர்கள் போதைப் பொருட்கள் பயன்படுத்தவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.