சென்னை: தமிழகத்தில் கொரேனா 2வது அலை தீவிரமாக பரவி வருவதால், நாளை முதல் இரவு  பொதுமுடக்கம் மற்றும் ஞாயிறு முழு ஊரடங்குடன் கொரோனா கட்டுப்பாடுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி வணிக நிறுவனங்கள் செயல்படவும் நேரம் மற்றும் கட்டுப்பாடுகள் மேலும் அதிகரிக்கப்பட்ட நிலையில், டாஸ்மாக் கடைகளுக்கு எந்தவித அறிவிப்பும், கட்டுப்பாடுகளும் அறிவிக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து,  டாஸ்மாக் மதுக்கடைகள் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும், மதுக்கடைகளின் செயல்பாட்டுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக டாஸ்மாக் கடை மேலாளர்களுக்கு பின்பற்றப்பட வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து சுற்றறிக்கை  அனுப்பப்பட்டுள்ளது. அதில்,

மதுக்கடைகளில் கூட்ட நெரிசல் இருக்கக்கூடாது. வரிசையில் நின்று வாங்க வேண்டும்.

ஒருவருக்கொருவர் குறைந்தது 6 அடி சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.

கடைப் பணியாளர்கள் மூன்றடுக்கு முகக்கவசம், கையுறைகள் பயன்படுத்த வேண்டும்.

மதுக்கடையை நாள் ஒன்றுக்கு இருமுறை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் 6 அடி சமூக இடைவெளியில் நிற்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

முகக்கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்ய வேண்டும்

மதுபானங்களை மொத்தமாக விற்பனை செய்யக்கூடாது.

ஒரேநேரத்தில் கடையின் உள்ளே 5 நபர்களுக்கு மேல் அனுமதியில்லை.

மதியம் 12 மணி முதல் இரவு 9 மணி வரை விற்பனை செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.